இந்திய நுகர்வோர் மின்சாதன உற்பத்தியாளரான லுமிபோர்டு புதிய ப்ளூடூத் ஹெட்போன் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இவை HD50, HD60 மற்றும் HD70 என அழைக்கப்படுகின்றன. இவற்றில் 40mm ஹெச்டி ட்ரூ-பேஸ் டிரைவர்கள், மடிக்கக்கூடிய ஹெட்பேண்ட் டிசைன், நாய்ஸ் கேன்சலேஷன் போன்ற வசதிகள் உள்ளன.
மூன்று புதிய ஹெட்போன்களும் ஒவர்-இயர் ரக மாடல்கள் ஆகும். இவற்றில் ப்ளூடூத் 5.0 மற்றும் டூயல் போன் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன் ஹெட்பேண்ட்கள் அட்ஜஸ்ட் மற்றும் மடிக்கும் தன்மை கொண்டிருக்கின்றன.
லுமிபோர்டு HD60 மற்றும் HD70 ஹெட்போன்கள் 12 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும் திறன் கொண்டுள்ளன. மூன்று ஹெட்போன்களிலும் AUX, மைக்ரோ எஸ்டி கார்டு மற்றும் எப்எம் ரேடியோ உள்ளன.
இத்துடன் நீண்ட நேரம் பயன்படுத்தும் போது காதுகளில் சவுகரியத்தை வழங்கும் வகையில் மென்மையான குஷன்கள் வழங்கப்பட்டு உள்ளன. மூன்று ஹெட்போன்களிலும் 400 எம்ஏஹெச் பேட்டரிகள் வழங்கப்பட்டு உள்ளன. HD50 மாடல் 10 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது.
லுமிபோர்டு லாங் டிரைவ் HD சீரிஸ் இயர்போன்கள்- HD50, HD60 மற்றும் HD70 விலை முறையே ரூ. 2599, ரூ. 2999 மற்றும் ரூ. 3699 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன