ஹெட்ஃபோன்கள் அல்லது டிடபிள்யூஎஸ் இயர்போன்கள் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக ஜேபிஎல் தனது புதிய JBL Live 660NC Headphones மற்றும் Live Pro++ டூ-வயர்லெஸ் இயர்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு சாதனங்களும் ஸ்மார்ட் சுற்றுப்புற மற்றும் தகவமைப்பு சத்தம் ரத்துசெய்யும் ஆதரவுடன் வருகின்றன. இது தவிர, குரல் உதவியாளர் ஆதரவும் கிடைக்கிறது.
இவை JBL லைவ் ப்ரோ பிளஸ் மற்றும் JBL லைவ் 660NC என அழைக்கப்படுகின்றன. இவற்றில் JBL சிக்னேச்சர் சவுண்ட், அடாப்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, ஸ்மார்ட் ஆம்பியன்ட், ஹேன்ட்ஸ்-ப்ரீ கண்ட்ரோல் மற்றும் பல்வேறு அம்சங்கள் உள்ளன.
இதில் உள்ள பேட்டரி ANC பயன்படுத்தாத போது 7 மணி நேரங்களும், ANC பயன்படுத்தினால் 6 மணி நேரத்திற்கும் பேக்கப் வழங்குகிறது. இதனுடன் வழங்கப்படும் சார்ஜிங் கேஸ் சேர்த்தால் கூடுதலாக 21 மணி நேரத்திற்கு பேக்கப் கிடைக்கும்.
JBL லைவ் ப்ரோ பிளஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்போன் இன்-இயர் டிசைன் மற்றும் சிறிய ஸ்டெம் கொண்டிருக்கிறது. இத்துடன் 3 எக்கோ கேன்சலிங் மைக், டூயல் கனெக்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுமட்டுமின்றி ஆட்டோ பிளே/பாஸ், பாஸ்ட் பேர், IPX4 தர வாட்டர் ரெசிஸ்டண்ட், ஸ்பீடு சார்ஜ், வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்களும் உள்ளன.
JBL லைவ் 660NC மாடல் ஒவர்-தி-இயர் ரக வயர்லெஸ் ஹெட்போன் ஆகும். இதில் JBL சிக்னேச்சர் சவுண்ட், அடாப்டிவ் நாய்ஸ் கேன்சலிங் தொழில்நுட்பம், ஸ்மார்ட் ஆம்பியன்ட் அம்சங்கள் உள்ளன. இத்துடன் அமேசான் அலெக்சா, கூகுள் அசிஸ்டண்ட் சேவைகளை ஹேண்ட்ஸ்-பிரீ முறையில் இயக்கும் வசதி வழங்கப்படுகிறது.
JBL லைவ் ப்ரோ பிளஸ் இயர்பட்ஸ் பிளாக் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ, 16,999 ஆகும். JBL லைவ் 660NC மாடல் பிளாக், வைட் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 12,999 ஆகும். இரு மாடல்களும் JBL ஆன்லைன் வலைதளம் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.