ஆடியோ சாதனங்களை விற்பனை செய்யும் ஹைஃபியூச்சர் (HiFuture) பிராண்டு தனது முதல் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
புதிய ஃபியூச்சர்பட்ஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் தளங்களில் ரூ. 6999 எனும் துவக்க விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு வருட வாரண்டியுடன் வரும் ஃபியூச்சர்பட்ஸ் இயர்பட்ஸ் வைட் மற்றும் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
ஹைஃபியூச்சர் பிராண்டு உலகம் முழுக்க 30-க்கும் அதிகமான நாடுகளில் வியாபாரம் செய்து வருகிறது. இந்தியாவில் இதன் ஆடியோ சாதனங்களை பேலஸ் ஆஃப் பிராண்ட்ஸ் விளம்பரப்படுத்தி விநியோகம் செய்யும் பணிகளை மேற்கொள்கிறது.
ஃபியூச்சர்பட்ஸ் இயர்பட்ஸ் பார்க்க ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ போன்றே காட்சியளிக்கிறது. இவை மிகக்குறைந்த எடையில் உருவாக்கப்பட்டு இருப்பதால், காதுகளில் அணியும் போது சவுகரிய அனுபவத்தை வழங்குகிறது. இத்துடன் இவை மூன்று அளவு கொண்ட சிலிகான் இயர்டிப்களை கொண்டிருக்கிறது.
இந்த இயர்பட்ஸ் சாதனத்தில் நான்கு உயர் ரக பில்ட்-இன் மைக்குகளும், டி.எஸ்.பி. தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர் அதிக சத்தமுள்ள பகுதிகளில் இருந்தாலும், தெளிவான தொலைபேசி உரையாடலை மேற்கொள்ள முடியும். அந்தளவு இதன் நாய்ஸ் கேன்சலேஷன் அம்சம் இயங்குகிறது.
ப்ளூடூத் 5.0 தொழில்நுட்பத்தில் இயங்கும் புதிய இயர்பட்ஸ் அதிகபட்சம் 10 மீட்டர்களுக்கு கனெக்டிவிட்டியை சீராக வழங்குகிறது. இதன் பேட்டரியை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் ஆறு மணி நேரங்களுக்கு பிளேபேக் கிடைக்கும். இதனுடன் வழங்கப்படும் கேஸ் கொண்டு சராசரியாக மொத்தம் 25 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் கிடைக்கிறது. இதன் பில்ட் இன் சார்ஜிங் கேஸ் 500 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது.
மேலும் இந்த இயர்பட்ஸ் மாடலில் ஆட்டோ-பேரிங், ஜெஸ்ட்யூர் அங்கீகார வசதி, கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் ஆப்பிள் சிரி போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது.