கூகுள் நிறுவனம் அதன் கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போனை அறிமுக செய்த அதே நிகழ்வில் பிக்சல் பட்ஸ் வயர்லெஸ் இயர்பட்களை அறிமுகம் செய்தது. புதிய இயர்பட்ஸ் இயர்டிப் மாற்றும் வசதி கொண்டிருக்கிறது. இது காதுகளில் சவுகரியமாக பொருந்தி கொள்ளும் வகையில் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் டூயல் மைக்ரோபோன் வழங்கப்பட்டுள்ளது. இது பின்னணியில் உள்ள சத்தத்தை குறைக்கும். இதில் உள்ள வாய்ஸ் அக்செல்லோமீட்டர் அதிக காற்றோட்டமான பகுதிகளிலும் குரலை மிகத் தெளிவாக கேட்க வழிசெய்யும். பிக்சல் பட்ஸ் நீண்ட தூர ப்ளூடூத் கனெக்டிவிட்டி கொண்டு போன் அருகில் இல்லாத போதும் இணைப்பில் இருக்கும்.
புதிய ட்ருலி வயர்லெஸ் இயர்பட்ஸ் ஹைப்ரிட் வடிவமைப்பு கொண்டிருப்பதால், காதுகளில் இருக்கும் போது அசவுகரியத்தை ஏற்படுத்தாது. இத்துடன் பிக்சல் பட்ஸ் இயர்பட்ஸ் அடாப்டிவ் சவுண்ட் அம்சம் கொண்டிருக்கிறது. இது பயனர் இருக்கும் சூழலுக்கு ஏற்ப சத்தத்தை மாற்றியமைக்கும்.
இத்துடன் ஆட்டோமேடிக் டிடெக்ஷன், பிளே, பாஸ், வால்யூம் மாற்ற டச் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டுள்ளன. பிக்சல் பட்ஸ் இயர்பட்ஸ் இல் வழங்கப்பட்டுள்ள பில்ட் இன் பேட்டரி தொடர்ச்சியாக ஐந்து மணி நேரத்திற்கு பயன்படுத்த வழி செய்யும். பிக்சல் பட்ஸ் வியர்வை மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.
கூகுளின் பிக்சல் பட்ஸ் வயர்லெஸ் இயர்பட்ஸ் கிளியர்லி வைட், ஓ சோ ஆரஞ்சு, கொயட் மின்ட், ஆல்மோஸ்ட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 179 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 12,790) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இதன் விற்பனை அடுத்த ஆண்டு துவங்குகிறது.