கூகுள் நிறுவனம் நெஸ்ட் மினி ஸ்மார்ட் ஸ்பீக்கரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மேம்பட்ட கூகுள் அசிஸ்டண்ட் சேவையுடன் கிடைக்கும் புதிய ஸ்மார்ட் ஸ்பீக்கர் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய நெஸ்ட் மினி ஸ்பீக்கர் அதிக சத்தமுள்ள பகுதிகளிலும் சிறப்பாக இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. வெளிப்புற சத்தத்தை அசிஸ்டண்ட் தானாக கண்டறிந்து அதற்கேற்ற செட்டிங்களை இயக்கும். இதில் உள்ள பிராக்சிமிட்டி வாடிக்கையாளர் கைகளை அருகில் கொண்டு செல்லும் போது தானாக LED.யை இயக்க வழி செய்கிறது.
நெஸ்ட் மினி ஸ்பீக்கர் கூகுள் ஹோம் மினி மாடலை விட இருமடங்கு சக்திவாய்ந்தது. இதன் ஹார்டுவேரை சிறப்பான வகையில் பயன்படுத்த ஏதுவாக ஆடியோ டியூனிங் மென்பொருளை கூகுள் பொறியாளர்கள் சிறப்பாக உருவாக்கி இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதை கொண்டு ஆடியோவை எவ்வாறு அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என அறிந்து கொள்ள முடியும். கூகுள் ஹோம், ஹோம் மினி போன்றே நெஸ்ட் மினி ஸ்மார்ட் ஸ்பீக்கரும் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் இயங்கும் திறன் கொண்டிருக்கிறது. நெஸ்ட் மினியை செட்டப் செய்து, “Hey Google, what can you do?” என கூறி பயன்படுத்த துவங்கலாம்.
இந்தியாவில் கூகுள் நெஸ்ட் மினி ஸ்மார்ட் ஸ்பீக்கர் சாக் மற்றும் சார்கோல் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 4,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.