கூகுள் நிறுவனத்தின் ஹோம் மற்றும் ஹோம் மினி் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டன. பிளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் விற்பனையாளர்கள் மூலம் விற்பனை துவங்கியிருக்கும் நிலையில் புதிய ஸ்பீக்கர்களை வாங்குவோருக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் கூகுள் ஹோம் மற்றும் ஹோம் மினி ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் விலை முறையே Rs,.9,999 மற்றும் Rs.4,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூகுள் புதிய ஸ்மார்ட் ஸ்பீக்கர்களை வாங்குவோருக்கு கூகுள் பிளே மியூசிக் சேவையை 31, 2018 வரை இலவசமாக பயன்படுத்த முடியும் என கூகுள் அறிவித்துள்ளது.
ஹோம் மினி சிறிய ரக ஸ்பீக்கர் என்பதோடு டச் கண்ட்ரோல் மற்றும் குரல் மூலம் இயக்கக்கூடிய வசதிகளை கொண்டுள்ளது. கூகுள் ஹோம் மேக்ஸ் 4.5 இன்ச் ஊஃபர்கள் மற்றும் 0.7இன்ச் டுவீட்டர்களை கொண்டிருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் சலுகைகள்
ரிலையன்ஸ் விற்பனை மையங்கள் அல்லது பிளிப்கார்ட் வெப்சைட்டில் கூகுள் ஹோம் டிவைஸை வாங்குவோருக்கு ஜியோஃபை சாதனம் இலவசமாக வழங்கப்படுகிறது.
ரூ.149 மற்றும் பிரைம் சந்தா ரூ.99 செலுத்துவோருக்கு கூடுதலாக 100 ஜிபி டேட்டா ஒரு வருட வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. கூடுதல் டேட்டா மைஜியோ கணக்கில் சேர்க்கப்பட்டு விடும்.
பிளிப்கார்ட் வழங்கும் சலுகைகள்
Rs.1 மட்டும் செலுத்தி கானா பிளஸ் அல்லது சாவன் ப்ரோ சேவையை கூடுதலாக 1.5 ஆண்டுகள் / 18 மாதங்களுக்கு பயன்படுத்த முடியும்.
இத்துடன் எக்சேஞ்ச் செய்யும் போது Rs,1500 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
செலக்ட் செய்யப்பட்ட பேங்க் கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 10% கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
ஆக்ட் (ACT) ஃபைபர்நெட் வழங்கும் சலுகைகள்
ஆக்ட் ஃபைபர்நெட் பயனர்கள் 90MBPS அல்லது அதற்கும் அதிக சலுகைக்கு 12 மாதங்களுக்கு சந்தா செலுத்தும் போது கூகுள் ஹோம் மினி ஸ்பீக்கரை இலவசமாக பெற முடியும்