உள்நாட்டு நிறுவனமான போல்ட் ஆடியோ தனது புதிய நெக்பேண்ட் இயர்போன்களான போல்ட் எஃப்எக்ஸ் சார்ஜ்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நெக்பேண்டில், சுற்றுச்சூழலுக்கான இரைச்சல் கேன்சலுடன் வேகமாக சார்ஜ் செய்வதற்கான ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நெக் பேண்டில் 32 மணிநேர பேட்டரி பேக்கப் உள்ளது. போல்ட் எஃப்எக்ஸ் சார்ஜ் 14.2மிமீ ஆடியோ டிரைவர் மற்றும் புளூடூத் 5.2ஐ ஆதரிக்கிறது. நெக்பேண்ட் iOS, Android, MacBook மற்றும் Windows ஐ ஆதரிக்கிறது.
போல்ட் ஆடியோ FXசார்ஜ் நெக்பேண்ட் இயர்போன் அமேசான் தளத்தில் ரூ. 899 எனும் அறிமுக விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சலுகை எவ்வளவு காலத்திற்கு வழங்கப்படும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. இந்த இயர்பட்ஸ் பிளாக் மற்றும் கிரீன் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
புதிய போல்ட் ஆடியோ FXசார்ஜ் மாடல் 14.2 மில்லிமீட்டர் டிரைவர்களை கொண்டுள்ளது. இத்துடன் IPX5 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, ப்ளூடூத் 5.2 கனெக்டிவிட்டி, கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் சிரி போன்ற வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்போன் முழு சார்ஜ் செய்தால் 32 மணி நேர பிளேபேக் வழங்கும்.
இந்த இயர்போன் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், மேக் ஓஎஸ் மற்றும் விண்டோஸ் சாதனங்களுடன் இணைந்து இயங்கும் திறன் கொண்டுள்ளது. இதில் உள்ள இன்லைன் கண்ட்ரோல்கள் மூலம் வால்யூம், மியூசிக் அட்ஜஸ்ட், அழைப்புகளை ஏற்பது, நிராகரிப்பது போன்றவற்றை செய்ய முடியும். இதில் உள்ள பாஸ்ட் சார்ஜிங் அம்சம் ஐந்து நிமிட சார்ஜிங்கில் ஏழு மணி நேரத்திற்கான பிளேடைம் வழங்குகிறது. இத்துடன் யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் வழங்கப்பட்டு உள்ளது.