Boult Audio நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்.

Updated on 02-Jul-2020
HIGHLIGHTS

புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம்

புதிய ட்ரூஃபைவ் இயர்பட்ஸ் குவால்காம் நிறுவனத்தின் கியூசிசி3020 சிப்செட் கொண்டுள்ளது

PX7 சான்று, அல்ட்ரா லோ லேடென்சி ஆடியோ மற்றும் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

Boult ஆடியோ நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய இயர்பட்ஸ் ட்ரூஃவைப் ப்ரோ (Tru5ive Pro) என அழைக்கப்படுகிறது. 

புதிய ட்ரூஃபைவ் இயர்பட்ஸ் குவால்காம் நிறுவனத்தின் கியூசிசி3020 சிப்செட் கொண்டுள்ளது. இது ப்ளூடூத் 5 மூலம் சாதனங்களுடன் இணைந்து கொள்கிறது. மேலும் இதில் ஆப்ட்எக்ஸ் கோடெக் சப்போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த சிப் அல்ட்ரா-லோ லேடென்சி மோட் கொண்டுள்ளது. இதனால் கேமிங்கிற்கு சரியாக இயர்பட்ஸ் ஆக இது இருக்கும்.
போல்ட் ட்ரூஃபைவ் ப்ரோ இதில் ஆப்ட்எக்ஸ், ப்ளூடூத் 5.0, ஹை சென்சிட்டிவ் மைக், IPX7 சான்று, அல்ட்ரா லோ லேடென்சி ஆடியோ மற்றும் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

போல்ட் ஆடியோ இயர்பட்ஸ் ஒருமுறை சார்ஜ் செய்தால் 6 முதல் 8 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் சார்ஜிங் கேஸ் சேர்க்கும் போது 24 மணி நேரங்களுக்கு பேக்கப் வழங்குகிறது. இந்த இயர்பட்ஸ் முழுமையாக சார்ஜ் ஆக 1.5 மணி நேரம் ஆகும்.
 
இந்த இயர்போன்களில் மென்மையான சிலிகான் இயர்பட்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த இயர்போன்களில் நியோடிமியம் டிரைவர்கள் வழங்கப்பட்டுள்ளது. இது தலைசிறந்த பேஸ், மற்றும் பேசிவ் பைலேட்டரல் நாய்ஸ் ஐசோலேஷன் வசதியை வழங்குகிறது.

இந்தியாவில் போல்ட் ஆடியோ ட்ரூஃபைவ் இயர்பட்ஸ் ரூ. 2999 விலையில் அமேசான் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :