boAt 501 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம்
போட், ஏர்டோப்ஸ் 501 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது
போட் ஏர்டோப்ஸ் 501 மாடலில் IPX4 தர ரேட்டிங், டச் கண்ட்ரோல், ஒருமுறை சார்ஜ் செய்தால் 5 மணி நேரத்திற்கான பேக்கப், யு.எஸ்.பி. டைப் சி சார்ஜிங், ASAP சார்ஜ் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது.
போட் சிக்னேச்சர் சவுண்ட், ஹைப்ரிட் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் அம்சம் வெளிப்புற சத்தத்தை 30 டிபி வரை குறைக்கிறது
இந்தியாவை சேர்ந்த ஆடியோ சாதனங்கள் விற்பனையாளரான போட், ஏர்டோப்ஸ் 501 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. பெயருக்கு ஏற்றார்போல் இந்த இயர்பட்ஸ் ஹைப்ரிட் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, பீஸ்ட் தொழில்நுட்பம், இன்ஸ்டா வேக் அன்ட் பேர் தொழில்நுட்பம், ப்ளூடூத் 5.2 போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.
போட் ஏர்டோப்ஸ் 501 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்
போட் ஏர்டோப்ஸ் 501 மாடலில் IPX4 தர ரேட்டிங், டச் கண்ட்ரோல், ஒருமுறை சார்ஜ் செய்தால் 5 மணி நேரத்திற்கான பேக்கப், யு.எஸ்.பி. டைப் சி சார்ஜிங், ASAP சார்ஜ் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள ASAP சார்ஜிங் 5 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 60 நிமிடத்திற்கான பிளேபேக் வழங்குகிறது.
இதில் உள்ள 8 எம்.எம். டிரைவர்கள் போட் சிக்னேச்சர் சவுண்ட், ஹைப்ரிட் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் அம்சம் வெளிப்புற சத்தத்தை 30 டிபி வரை குறைக்கிறது. இத்துடன் போட் நிறுவனத்தின் (Bionic Engine And Sonic Technology – BEAST) பீஸ்ட் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இது ஆடியோ மற்றும் வீடியோ சீராக இயங்க வழி செய்கிறது.
இந்தியாவில் போட் ஏர்டோப்ஸ் 501 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் விலை ரூ. 2499 ஆகும். இது அமேசான் மற்றும் போட் வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile