Apple AirPods Pro 2 ஏக்டிவ் நோய்ஸ் கேன்ஸிலேசனுடன் அறிமுகம்.

Updated on 08-Sep-2022
HIGHLIGHTS

ஐபோன் 14, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 வரிசையில் ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலையும் அறிமுகம் செய்து இருக்கிறது.

புதிய ஆப்பிள் வயர்லெஸ் இயர்பட்ஸ் அதன் அளவுக்கு அதிக தரமுள்ள ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது

புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலின் முன்பதிவு செப்டம்பர் 9 ஆம் தேதி துவங்குகிறது

ஐபோன் 14, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 வரிசையில் ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலையும் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஆப்பிள் வயர்லெஸ் இயர்பட்ஸ் அதன் அளவுக்கு அதிக தரமுள்ள ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. புது இயர்பட்ஸ் தோற்றத்தில் முந்தைய மாடலை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இதன் உள்புற அம்சங்களில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ அம்சங்கள்:

புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலில் உள்ள H2 பிராசஸர் இருமடங்கு மேம்பட்ட ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், டிரான்ஸ்பேரன்சி மோட் மற்றும் ஸ்பேஷியல் ஆடியோ வசதிகளை வழங்குகிறது. இத்துடன் டச் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இதை கொண்டு பாடல்களை மாற்றுவது, வால்யும் அட்ஜஸ்ட் செய்வது உள்ளிட்டவைகளை மேற்கொள்ளலாம். புது இயர்பட்ஸ் உடன் வழங்கப்படும் சார்ஜிங் கேஸ் சிறிய ஸ்பீக்கர் கொண்டிருக்கிறது.

AirPods Pro 2 இன் பேட்டரி ஆயுள் தொடர்பான வழக்கில் 30 மணிநேர காப்புப்பிரதியை ஆப்பிள் கோரியுள்ளது. கேஸ் இல்லாமல், பட்ஸ் 6 மணிநேர காப்புப்பிரதியைப் பெறும். AirPods Pro 2 ஐ MagSafe மூலம் வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்யலாம்.

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலின் முன்பதிவு செப்டம்பர் 9 ஆம் தேதி துவங்குகிறது. விற்பனை செப்டம்பர் 23 ஆம் தேதி துவங்குகிறது. இதன் விலை ரூ. 26 ஆயிரத்து 900 ஆகும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :