புதிய அம்சங்களுடன் அப்டேட் ஆகும் ஆப்பிள் ஏர்பாட்ஸ்
ஆப்பிள் நிறுவனத்தின் வயர்லெஸ் இயர்போன்களான ஏர்பாட்ஸ் அதிநவீன அம்சங்களுடன் அப்டேட் செய்யப்பட்டு 2018-இல் வெளியிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் வயர்லெஸ் இயர்போன் வியாபாராத்தை விரிவுப்படுத்த ஆப்பிள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் ஆப்பிள் வயர்லெஸ் இயர்போன்களான ஏர்பாட்ஸ் புதிய அப்டேட் பெற இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி புதிய ஹார்டுவேர் அம்சங்களுடன் ஏர்பாட்ஸ் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன், ஐபேட் மற்றும் ஆப்பிள் வாட்ச் போன்று ஏர்பாட்ஸ்-ம் 2018-இல் புதிய அப்டேட் பெற இருக்கிறது.
புதிய மாடல் ஏர்பாட்ஸ் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய மாடலில் இயர்போன்களை தொடாமல் சிரியை பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படலாம். இது ஐபோன் அல்லது ஹோம்பாட்களில் சிரி வேலை செய்வதை போன்றே வயர்லெஸ் இயர்போன்களிலும் வேலை செய்யும் என கூறப்படுகிறது.
ப்ளூடூத் இணைப்புகளை சீராக இயக்க மேம்படுத்தப்பட்ட ஆப்பிள் வயர்லெஸ் சிப்செட் கொண்டிருக்கும் என்றும் இந்த சிப்செட் ஆப்பிள் ஆய்வு மையங்களில் B288 என அழைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி நீர் துளிகள் இயர்போன் மீது விழுந்தாலோ அல்லது மழைத்துளிகளிலும் பாதிக்காத வகையில் இருக்கும் என கூறப்படுகிறது.
தண்ணீரில் மூழ்கடிக்கும் வரையிலான வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி இடம்பெறாது. சமீபத்தில் வெளியாகி இருக்கும் ஐபோன்களும் ஸ்விம்-ப்ரூஃப் அளவு வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி பெற்றிருக்கிறது. ஆப்பிள் ஏர்பாட்ஸ் 2 இந்த ஆண்டின் முதல் பாதியில் வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ள போதிலும் வெளியீடு நீட்டிக்கப்படவும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதுகுறித்து ஆப்பிள் அதிகாரிகள் எவ்வித பதிலும் வழங்கவில்லை.
ஆப்பிள் ஹோம்பாட் ஸ்பீக்கரை உருவாக்கிய குழுவினரே புதிய ஏர்பாட்ஸ்-யும் தயாரித்துள்ளனர். 2016-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் முதல் ஏர்பாட்ஸ் இயர்போன்களை அறிமுகம் செய்தது. ஐபோன் 7 உடன் அறிமுகம்
செய்யப்பட்ட வயர்லெஸ் இயர்போன் வயர் வைத்த ஹெட்போன்களுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டது.
அறிமுகம் செய்யப்பட்டது முதல் ஆப்பிள் ஏர்பாட்ஸ் விற்பனையில் சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது. இது வயர்லெஸ் சாதனங்களுக்கு புதிய மாற்றாக அமைந்திருக்கிறது. ஹெட்செட்-ஐ சார்ஜ் செய்யும் வகையில் முழுமையான வயர்லெஸ் ஹெட்போனாக ஏர்பாட்ஸ் அமைந்தது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile