இந்தியாவில் இந்த யூடியூப் ம்யூஸில் வெளியிட்டுள்ளது

இந்தியாவில் இந்த  யூடியூப்  ம்யூஸில்  வெளியிட்டுள்ளது
HIGHLIGHTS

யூடியூப் நிறுவனம் யூடியூப் மியூசிக் ஸ்டிரீமிங் சேவையை இந்தியாவில் வெளியிட்டுள்ளது

யூடியூப் நிறுவனம் யூடியூப் மியூசிக் ஸ்டிரீமிங் சேவையை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. முன்னதாக இந்த சேவை கடந்த ஆண்டு மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் கூகுள் தனது பிளே மியூசிக் சேவையை 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது.

புதிய யூடியூப் மியூசிக் சேவையில் அதிகாரப்பூர்வ பாடல்கள், ஆல்பம்கள், ஆயிரக்கணக்கான பிளே லிஸ்ட்கள், ஆர்டிஸ்ட் ரேடியோ மற்றும் யூடியூபின் பிரத்யேக ரீமிக்ஸ், லைவ்  நிகழ்ச்சிகள், கவர்கள் மற்றும் மியூசிக் வீடியோக்களை பார்த்து ரசிக்கலாம். இவை அனைத்தும் மிக எளிமையாக காட்சியளிப்பதோடு தனிப்பட்ட முறையில் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

யூடியூப் பிரீமியம் சேவையில் ஆஃப்லைன் டவுன்லோடு வசதி வழங்கப்பட்டுள்ளது. எவ்வித விளம்பரங்களும் இன்றி யூடியூப் மியூசிக் பிரீமியம் சேவையை ரூ.99 மற்றும் குடும்ப சந்தாவுக்கு மாதம் ரூ.149 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குடும்ப சந்தாவில் தனிநபர் மற்றும் ஐந்து குடும்ப உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ள முடியும்.

யூடியூப் மியூசிக் சேவை இலவசமாகவும் கிடைக்கிறது. எனினும், இலவச சேவையை பயன்படுத்தும் போது இடையிடையே விளம்பரங்கள் வரும். யூடியூப் மியூசிக் பிரீமியம் சேவையில் பாடல்கள் மற்றும் வீடியோக்களை ஸ்மார்ட்போன் லாக் செய்யப்பட்ட நிலையிலும், பேக்கிரவுண்டில் இயக்க முடியும்.

சிறப்பு அறிமுக சலுகையின் பேரில் யூடியூப் மியூசிக் சேவைக்கான பிரீமியம் சந்தா முதல் மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு பின் பயனர்களது கட்டண சந்தா அமலாகும். கூகுள் பிளே மியூசிக் பயனர்களுக்கு யூடியூப் மியூசிக் பிரீமியம் சந்தாவும் சேர்த்து வழங்கப்படும்.

யூடியூப் நிறுவனம் யூடியூப் பிரீமியம் சேவையை மாதம் ரூ.129 கட்டணத்தில் வழங்குகிறது. யூடியூப் பிரீமியம் சேவையில் பயனர்களுக்கு விளம்பரங்கள் இல்லா அனுபவம், பேக்கிரவுண்டு பிளே மற்றும் ஆஃப்லைன் வீடியோக்களை இயக்கும் வசதி வழங்கப்படுகிறது. 

சாம்சங் கேலக்ஸி S10 பயன்படுத்துவோருக்கு யூடியூப் பிரீமியம் சேவை நான்கு மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் யூடியூப் மியூசிக் சேவையும் அடங்கும். மற்ற பயனர்களுக்கு மூன்று மாதம் வரை இலவச பிரீமியம் சேவை வழங்கப்படுகிறது. கூடுதலாக ரூ.60 செலுத்தும் பயனர்களுக்கு யூடியூப் பிரீமியம் குடும்ப சந்தா வழங்கப்படுகிறது. இதில் கூடுதலாக ஐந்து குடும்ப உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ள முடியும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo