YouTube இப்பொழுது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஒரு புதிய அப்டேட் கொண்டு வந்துள்ளது
Google I/O 2018, YouTub இப்பொழுது நீங்கள் பெரிய வீடியோ பார்கிறீர்கள் என்றால் அதில் நீங்கள் ப்ரேக் எடுத்துவிட்டு பார்க்கும் புதும் அம்சம்.
கூகுள் I/O 2018 நிகழ்வில் பொது மக்கள் தொழில்நுட்பத்துடன் அளவுக்கு அதிகமாக ஒன்றிவிடுவதை தவிர்க்க செய்யும் வெல்பீயிங் எனும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. கூகுளின் வீடியோ ஸ்ட்ரீமிங் வலைத்தளமான யூடியூப் இந்த திட்டத்தின் கீழ் வருகிறது.
அந்த வகையில் யூடியூப் செயலியை பயன்படுத்துவோர் முன்கூட்டியே இடைவெளி காலத்தை நிர்ணயித்து யூடியூபிடம் தெரிவிக்கலாம். இதன் மூலம் நீண்ட நேரம் யூடியூப் பயன்படுத்தும் போது குறிப்பிட்ட கால அளவில் இடைவெளி எடுக்க முடியும். யூடியூப் ஆன்ட்ராய்டு செயலியில் டேக் எ பிரேக் (Take a Break) அம்சம் இந்த வசதியை வழங்குகிறது.
ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் யூடியூப் செயலியை பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு இதற்கான அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் யூடியூப் செட்டிங்ஸ் ஆப்ஷனில் இடைவெளி காலத்தை ஒவ்வொரு 15, 30, 60, 90 அல்லது 180 நிமிடங்களுக்கு தேர்வு செய்ய முடியும். வாடிக்கையாளர் இந்த கால அளவை தேர்வு செய்ததும், குறிப்பிட்ட நேரத்தில் யூடியூப் வீடியோ தானாக பாஸ் (Pause) ஆகி விடும்.
இனி வாடிக்கையாளர்கள் விரும்பினால் இடைவெளி எடுக்கவோ அல்லது தொடர்ந்து வீடியோக்களை பார்க்கவோ முடியும். விரும்புவோர் தேர்வு செய்யும் வகையில் கிடைக்கும் இந்த ஆப்ஷனை ஸ்விட்ச் ஆஃப் செய்யவும் முடியும். இத்துடன் இரண்டு புதிய அம்சங்கள் யூடியூப் செயலியில் சேர்க்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் டிசேபிள் சவுன்ட்ஸ் & வைப்ரேஷன்ஸ் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதனை தேர்வு செய்ததும் வாடிக்கையாளர் விரும்பும் நேரத்திற்கு யூடியூப் ஆன்ட்ராய்டு செயலியில் இருந்து நோட்டிஃபிகேஷன்கள் எதுவும் வராது. ஷெட்யூல்டு டைஜஸ்ட் எனும் மற்றொரு அம்சம் வாடிக்கையாளர்கள் விரும்பும் நேரத்தில் ஒரு நாளைக்கு ஒரு முறை அனைத்து நோட்டிஃபிகேஷன்களையும் அனுப்பும்.
ஆன்ட்ராய்டு இயங்குதளத்துக்கான யூடியூப் (13.17.55) பதிப்பில் டேக் எ பிரேக் அம்சம் சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்த அம்சத்தை யூடியூப் செட்டிங்ஸ் — ஜெனரல் — டேக் எ பிரேக் ஆப்ஷன்களை தேர்வு செய்யலாம். இதேபோன்று நோட்டிஃபிகேஷன் அம்சம் செட்டிங்ஸ் — நோட்டிஃபிகேஷன் ஆப்ஷன்களை தேர்வு செய்யலாம்.
புதிய அப்டேட் கொண்டிருக்கும் அம்சங்கள் அனைத்தும் புதியவை, இவை வாடிக்கையாளர்கள் தொழில்நுட்பத்திற்கு அடிமையாகாமல் இருக்க உதவுகிறது. ஆன்ட்ராய்டு பி இயங்குதளத்தில் கூகுளின் டிஜிட்டல் வெல்பீயிங் திட்டம் சார்ந்து பல்வேறு அம்சங்களை அறிமுகம் செய்ய கூகுள் திட்டமிட்டுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile