சியோமி நிறுவனம் paytm, மற்றும் கூகுள் பே போல சேவையை போல இந்தியாவில் அதன் Mi பே சேவையை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த Mi பே சேவை ICICI பேங்க் உடன் இயங்குகிறது.
பயனர்கள் தங்களது UPI . முகவரி மற்றும் பேங்க் அக்கவுண்ட்டிற்கு நேரடியாக பணம் அனுப்பும் வசதியை வழங்குகிறது. Mi பே சேவையை பயன்படுத்தும் அனைத்தும் பயனர்களின் அனைத்து விவரங்களும் உள்நாட்டு சர்வெர்களிலேயே சேமிக்கப்படுவதாக சியோமி அறிவித்துள்ளது.
இதனை பயன்படுத்த போன், கான்டாக்ட் மற்றும் எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவற்றை இயக்குவதற்கான அனுமதியினை வழங்கினால் மட்டுமே இயக்க முடியும்.
Mi பே சேவை காண்டாக்ட், SMS , ஸ்கேனர் செயலிகளினுள் MIUI தளத்தின் ஆப் வால்ட்டில் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் மிக எளிமையாக பணப்பரிமாற்றம் செய்ய முடியும். இத்துடன் மற்ற மொபைல் பேமென்ட் சேவைகளை போன்று மொபைல் போன் பில் / ரீசார்ஜ், டி.டி.ஹெச். ரீசார்ஜ், மின்சேவை கட்டணம் மற்றும் பல்வேறு சேவைகளுக்கு பணம் செலுத்தலாம்.
சியோமியின் Mi பே செயலி வரும் வாரங்களில் அனைவருக்கும் கிடைக்கும் என்றும், Mi ஆப் ஸ்டோரில் பயனர்கள் இதனை டவுன்லோடு செய்து கொள்ளலாம். Mi பே செயலியை கொண்டு பணப்பரிமாற்றம் செய்யும் போது பயனர்கள் அதிகபட்சம் 100 ரெட்மி நோட் 7 போன்களையும், 50 Mi எல்.இ.டி. டி.வி. 4ஏ ப்ரோ 32 இன்ச் மாடல்களை வெல்ல முடியும்
பயனர்களின் முழு தகவல்களும் இந்தியா சார்ந்து இயங்கும் கிளவுட் சேவையில் என்க்ரிப்ட் செய்யப்பட்ட வடிவில் சேமித்து வைக்கப்படுவதாக சியோமி தெரிவித்துள்ளது. செயலியை சோதனை செய்தபின் Mi பே செயலியை MIUI 10 பீட்டாவில் அறஇமுகம் செய்து, தற்சமயம் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது