WhatsApp Meta AI யின் அம்சம் மூலம் இனி பேசுவதற்க்கு ஜாலியாக இருக்கும்
WhatsApp சமீபத்தில் அதன் மேடையில் Meta AI சப்போர்டை வெளியிட்டது
நிறுவனம் Meta AI வொயிஸ் தேர்ந்தெடுக்கும் விருப்பத்தை சேர்க்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
வாட்ஸ்அப்பின் புதிய மற்றும் வரவிருக்கும் அம்சங்களைக் கண்காணிக்கும்
WhatsApp சமீபத்தில் அதன் மேடையில் Meta AI சப்போர்டை வெளியிட்டது. இப்போது, அதை மேலும் செயல்பாட்டுக்கு கொண்டு வரவும், சேட்களுடன் சிறப்பாக ஒருங்கிணைக்கவும், நிறுவனம் Meta AI வொயிஸ் தேர்ந்தெடுக்கும் விருப்பத்தை சேர்க்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வாட்ஸ்அப்பின் புதிய மற்றும் வரவிருக்கும் அம்சங்களைக் கண்காணிக்கும் வெப்சைட்டன WABetaInfo, Meta-க்குச் சொந்தமான இன்ஸ்டன்ட் மெசேஜ் தளமானது, பயனர்கள் தேர்ந்தெடுக்கும் வகையில் Meta AIக்கான கூடுதல் குரல் விருப்பங்களைச் சேர்ப்பதில் வேலை செய்வதை வெளிப்படுத்தியுள்ளது. கூடுதலாக, வாட்ஸ்அப்பில் Meta AI க்கு நிகழ்நேர குரல் அரட்டை அம்சத்தைக் கொண்டுவரவும் Meta திட்டமிட்டுள்ளது.
WhatsApp கொண்டு வருகிறது Meta AI வொயிஸ் ஆப்ஷன்
அறிக்கையின்படி, வாட்ஸ்அப் பீட்டா ஆண்ட்ராய்டு 2.24.17.16 அப்டேட் மெட்டா AI வொயிஸ் விருப்பங்களுக்கு சப்போர்டை கொண்டுவரும். இந்த அம்சம் உங்கள் Meta AI சாட்போட் உடன் பேசும்போது ஆட்டோமேட்டிக் கூடுதல் விருப்பங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வொயிஸ் கமண்ட்ஸ் பயன்படுத்தி Meta AI உடன் நிகழ்நேர வொயிஸ் காண்டேக்ட்களை இணைக்க WhatsApp முயற்சிக்கிறது என்பதை பகிரப்பட்ட ஸ்கிரீன்ஷாட் சுட்டிக்காட்டுகிறது. இந்த அம்சம் பிளாட்ஃபார்மில் Meta AI உடன் ஹேண்ட்ஸ்-ஃப்ரீ தொடர்புகளை செயல்படுத்தும். Meta AI ஆனது பயனர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குரல் மற்றும் டோன் பயன்படுத்தி வொயிஸ் தூண்டுதல்களுக்கு பதிலளிக்கும்.
இது தவிர, மெட்டா மற்றொரு விருப்பத்தை சேர்க்க தயாராகி வருகிறது, இதன் கீழ் பயனர்கள் எப்போது வேண்டுமானாலும் வொயிஸ் சேட்டை மோடை நிறுத்த முடியும். பயனர்கள் தங்கள் விருப்பப்படி வொயிஸ் முறை அல்லது அரட்டை முறைக்கு முற்றிலும் மாறுவதற்கான விருப்பமும் இருக்கும்.
இந்த அம்சம் எப்பொழுது கிடைக்கும்?
வாட்ஸ்அப்பின் எதிர்கால பதிப்புகளில் புதிய வொயிஸ் சேட்டை திறன்களை மெட்டா வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த அம்சம் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட எண்ணிக்கையிலான பயனர்களிடம் மட்டுமே பீட்டா சோதனையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :PAN card இருக்கும் தவறை வீட்டிலிருந்தபடி சரி செய்து 1 நிமிடத்தில் டவுன்லோட் செய்யலாம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile