வாட்ஸ்அப் செயலியில் புதிய அம்சங்கள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை ஃபேஸ்புக்கில் ஷேர் செய்து கொள்ளும், காண்டாக்ட் ரேங்கிங் போன்ற அம்சங்கள் சோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகின.
இந்த அம்சம் சோதனை செய்யப்படுவதாக இந்த ஆண்டு மே மாதத்திலும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வாட்ஸ்அப் செயலியில் QR . கோட் ஸ்கேனர் வசதி வழங்குவதற்கான சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது
புதிய QR . கோட் ஸ்கேனர் மூலம் பயனர்கள் அவரவர் காண்டாக்ட் விவரங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். இந்த அம்சம் வாட்ஸ்அப் பீட்டா 2.19.189 பதிப்பில் வழங்கப்படுகிறது.
உதாரணத்துக்கு உங்களின் நண்பருக்கு ஒட்டுமொத்தமாக 10 காண்டாக்ட் நம்பரை அனுப்ப வேண்டும் என்றால் அதை செலக்ட் செய்து QR கோட் ஆக மாற்றி அனுப்ப முடியும் மேலும் அந்த நபர் இந்த QR கோட் க்ளிக் செய்யும்பொழுது அனைத்து காண்டாக்ட் நம்பர்களையும் பெற முடியும்.
வாட்ஸ்அப் QR கோட் ஸ்கேனர் வசதி
புதிய அம்சம் ஷார்ட்கட் முறையில் வழங்கப்படுகிறது. பயனர்கள் இதனை க்ளிக் செய்து ஸ்கேன் மற்றும் ஷேர் செய்ய துவங்கலாம். முன்னதாக வெளியான தகவல்களில் வாட்ஸ்அப் QR கோட் உறுதி செய்யப்பட்டதும், செயலி காண்டாக்ட் விவரங்களை தானாக பதிவு செய்யத் துவங்கும் என கூறப்பட்டது.
தற்சமயம் இந்த அம்சம் அனைத்து பீட்டா பயனர்களுக்கும் வழங்கப்படவில்லை. எதி்ர்காலத்தில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படலாம். இன்ஸ்டாகிராம் செயலியில் யூசர்நேம் மற்றும் ஃபேஸ்புக் மெசஞ்சர்QR . கோட் அம்சங்களை போன்று புதிய அம்சமும் இயங்கும் என தெரிகிறது