WhatsApp யில் வருகிறது மிக சிறந்த அம்சம், இனி யாரோட மெசேஜுக்கு ரிப்ளை செய்ய மறக்க மாட்டிங்க
WhatsApp யில் Message reminders அம்சம் கொண்டுவந்துள்ளது
இந்த அம்சம் ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் பீட்டா வெர்சனான 2.24.0.25.29 யில் கிடைக்கும்
இந்த அம்சத்தின் மூலம், பயனர்கள் தவறவிட்ட மெசேஜ்கள் அல்லது அப்டேட் குறித்த நோட்டிபிகேசன் அனுப்பப்படும்.
WhatsApp யில் பல பேர் அதிகளவில் செசெஜ்களை அனுப்பி வாருகிறார்கள் மேலும் சில சமயம் மிகவும் முக்கியமான மெசேஜுக்கு ரிப்ளை செய்ய மறந்து விடுகிறோம் இது போன்ற சம்பவம் நம்முள் பல பேருக்கு நடந்து இருக்கும் மேலும் தற்பொழுது இது போன்ற பிரச்னையிலிருந்து தப்பிக்க WhatsApp யில் Message reminders அம்சம் கொண்டுவந்துள்ளது அதாவது இது போன்ற மெசேஜை நீங்கள் ரிப்ளை செய்ய மறந்திருந்தாலோ அல்லது பின் செய்யலாம் என இருந்தாலோ இந்த புதிய அம்சத்தின் மூலம் ரிப்ளை செய்யாத மெசேஜுக்கு நோட்டிபிகேசன் வரும்.
WhatsApp யில் ரிமைன்டர் அம்சம்.
WABetaInfo யின் அறிக்கையின்படி, நிறுவனம் இந்த புதிய அம்சத்தில் செயல்படுகிறது. இதன் மூலம் முக்கியமான மெசேஜ்களை நீங்கள் தவறவிட முடியாது. இந்த அம்சம் ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் பீட்டா வெர்சனான 2.24.0.25.29 யில் கிடைக்கும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அம்சத்தின் மூலம், பயனர்கள் தவறவிட்ட மெசேஜ்கள் அல்லது அப்டேட் குறித்த நோட்டிபிகேசன் அனுப்பப்படும்.
இந்த அம்சம் உள் அல்காரிதம் அடிப்படையிலானது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அம்சம் நீங்கள் ஒரு தொடர்புடன் எத்தனை முறை தொடர்பு கொள்கிறீர்கள் என்பதன் அடிப்படையில் நோட்டிபிகேசன் வழங்கும். நீங்கள் யாரிடமாவது அதிகமாக பேசினால், அது குறித்த நோட்டிபிகேசன் கொடுக்கும். அதேசமயம் குறைவான அல்லது காண்டேக்ட் இல்லாத பயனர்களுக்கு இது நோட்டிபிகேசன் கொடுக்காது.
இந்த அம்சம் எப்பொழுது அனைவருக்கு வரும் ?
ப்ரைவசி மனதில் வைத்து, வாட்ஸ்அப் இந்தத் டேட்டாவை லோக்கல் டிவைசில் மட்டுமே சேமிக்கும். மேலே குறிப்பிட்டுள்ளபடி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கு இந்த அம்சம் தற்போது கிடைக்கிறது. எந்தவொரு புதிய அம்சத்தையும் வெளியிடுவதற்கு முன், நிறுவனம் அதை பீட்டா டெஸ்டர்களுக்கு கிடைக்கும்.
இந்த அம்சத்திற்காக பலர் காத்திருந்தனர். இப்போது இறுதியாக நிறுவனம் தேர்ந்தெடுத்த நபர்களுக்குக் கிடைக்கச் செய்கிறது. நிறுவனம் விரைவில் மீதமுள்ள பயனர்களுக்கு இந்த அம்சத்தை அனைவருக்கும் விரைவில் வழங்கும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile