வாட்ஸ்அப் ஆப் பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படலாம் என்ற வாக்கில் பலமுறை தகவல்கள் வெளியாகி, பின் அவை வதந்தி என கூறப்பட்டது. ஆனால் இம்முறை வாட்ஸ்அப் உண்மையாகவே கட்டணம் வசூலிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
அதன்படி வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியில் மெசேஜ்களை 24 மணி நேரத்திற்கு பின் பதில் அனுப்பினால் கட்டணம் செலுத்த வேண்டும் என வாட்ஸ்அப் அறிவித்துள்ளது. மேலும் ஸ்டேட்டஸ்களில் விளம்பரங்களை வழங்க திட்டமிடுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப் செயலியை கூர்ந்து கவனிப்பவராக இருந்தால், சில நிறுவனங்கள் உங்களை அணுக வாட்ஸ்அப் மூலம் அனுமதி கேட்டிருக்கலாம், மேலும் இதே வழிமுறையை ஃபேஸ்புக் பின்பற்ற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
புதுவகையான விளம்பரங்கள் மூலம் பயனர்கள் வாடிக்கையாளர் சேவை மையங்களுக்கு அழைப்பு விடுக்காமல், நேரடியாக நிறுவனங்களை வாட்ஸ்அப் மூலம் தங்களது சந்தேகங்கள் அல்லது புகார்களை தெரிவிக்க முடியும். ஒவ்வொரு நாட்டிலும் நிறுவனங்கள் வாட்ஸ்அப் மூலம் அனுப்பும் ஒவ்வொரு மெசேஜ்களுக்கும் பணம் வசூலிக்கும்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், உபெர் என ஏற்கனவே கிட்டத்தட்ட 100 நிறுவனங்கள் ஏற்கனவே இந்த அம்சத்தை சோதனை செய்ய துவங்கியிருக்கின்றன. எனினும் புதிய ஸ்டேட்டஸ் விளம்பரங்கள் 2019 முதல் தெரிய ஆரம்பிக்கும். ஸ்டேட்டஸ் பகுதியில் பயனர் எழுத்து, புகைப்படங்கள் அல்லது வீடியோ உள்ளிட்டவற்றை வைக்கலாம், இவை 24 மணி நேரத்திற்கு பின் தானாக அழிந்து போகும்.
உலகில் இதுவரை சுமார் 45 கோடி பேர் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்களில் ஏற்கனவே விளம்பரங்கள் வருகின்றன