இனி பூமரங்க் யூஸ் பண்ண தனி ஆப் தேவை இல்லை வாட்ஸ்அப் போதும்.

Updated on 08-Aug-2019
HIGHLIGHTS

வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலியில் பூமராங் போன்ற அம்சத்தை விரைவில் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பயனர்கள் தங்களது வீடியோக்களை பல்வேறு விதங்களில் லூப் செய்ய முடியும்

வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலியில் பூமராங் போன்ற அம்சத்தை விரைவில் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பூமராங் அம்சம் கொண்டு வீடியோக்களை கஸ்டமைஸ் செய்து மகிழ முடியும். வீடியோக்களில் வித்தியாசமாக மாற்றிக் கொள்ளும் இந்த அம்சம் இன்ஸ்டா பயனர்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருந்து வருகிறது.மேலும் வாட்ஸ்அப் தொடர்ந்து பல புதிய அப்டேட்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் இதேபோன்ற அம்சம் வாட்ஸ்அப் செயலியிலும் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. பயனர்கள் தங்களது வீடியோக்களை பல்வேறு விதங்களில் லூப் செய்ய முடியும். பல்வேறு புதிய அம்சங்களுடன் பூமராங் அம்சமும் மறைக்கப்பட்ட நிலையில், சோதனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

பூமராங் வீடியோக்களை அதிகபட்சம் 7 நொடிகள் வரை உருவாக்கி அதனை பயனர்கள் தங்களது காண்டாக்ட்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். பூமராங் வீடியோக்களை பயனர்கள் ஸ்டேட்டஸ் அப்டேட்களில் வைக்கும் வசதியும் வழங்கப்படலாம். முந்தைய அப்டேட்களை போன்று புதிய அம்சம் எப்போது அனைவருக்கும் வழங்கப்படும் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.

இந்த அம்சத்தை வீடியோ டைப் பேனலில் சேர்க்க டெவலப்பர்கள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பூமராங் அம்சம் வீடியோக்களை ஜிஃப் ஆக மாற்றும் ஆப்ஷனுடன் விரைவில் இணையும் என எதிர்பார்க்கலாம். ஜிஃப் போன்று பூமராங் அம்சமும் ஏழு நொடிகள் வரை பயன்படுத்தும் வசதி வழங்கப்படலாம்.

முன்னதாக வெளியான தகவல்களில் வாட்ஸ்அப் செயலியை பல்வேறு தளங்களில் இயக்குவதற்கான வசதியை வழங்க இருப்பதாக கூறப்பட்டது. இதன் மூலம் பயனர்கள் ஒரே அக்கவுண்ட்டினை பல்வேறு சாதனங்களில் பயன்படுத்த முடியும். இந்த அம்சம் எப்போது வழங்கப்படும் என்பது  பற்றி எந்த தகவழும் இல்லை 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :