வாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப் தளங்களில் பயோமெட்ரிக் ஆதென்டிகேஷன் வசதியை வழங்கி வருகிறது. இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. இது வெப் அல்லது டெஸ்க்டாப் தளத்தை பயன்படுத்துவோருக்கு கூடுதல் பாதுகாப்பு வசதியை வழங்குகிறது.
வாட்ஸ்அப் பிரைமரி சாதனம் மற்றும் வெப் / டெஸ்க்டாப் தளத்தை இயக்கும் போது கூடுதல் பாதுகாப்பு வழங்கும் நோக்கில் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் உரையாடல்களை துவங்கும் முன் கைரேகை அல்லது பேஸ் அன்லாக் போன்ற சோதனையை கொண்டு மற்றவர்கள் வாட்ஸ்அப் வெப் / டெஸ்க்டாப் தளத்தை இயக்குவதை தவிர்க்க உதவுகிறது.
ஆண்ட்ராய்டு தளத்தில் புதிய பாதுகாப்பு அம்சத்தை இயக்க பயனர்கள் வாட்ஸ்அப் செயலியில் More options ⇾ Link a Device ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். பின் வாட்ஸ்அப் ஸ்மார்ட்போனின் பயோமெட்ரிக் ஆதென்டிகேஷன் வசதியை இயக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை தெரிவிக்கும்.
ஐபோன்களில் Link a Device ⇾ OK ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். பின் பயனர்கள் ஸ்க்ரீனில் தெரியும் QR கோட் கொண்டு வாட்ஸ்அப் வெப் / டெஸ்க்டாப் பயன்படுத்த துவங்கலாம்.
வாட்ஸ்அப் வெப் அல்லது டெஸ்க்டாப்பை ஒருவரின் அக்கவுண்டில் இணைக்க, QR கோடை ஸ்கேன் செய்வதற்கு முன்பு, போனில் பேஸ் அல்லது பிங்கர்ப்ரின்ட் திறப்பைப் பயன்படுத்துமாறு கேட்கப்படுவார்கள் என்று வாட்ஸ்அப் கூறுகிறது. பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்டை லேப்டாப் அல்லது பிசி-யுடன் இணைக்க போனிலிருந்து QR கோடை ஸ்கேன் செய்ய வேண்டும்.
இந்த புதிய பாதுகாப்பு அம்சம், பயனருக்குத் தெரியாமல் தங்கள் வீட்டு வாட்ஸ்அப் அக்கவுண்டில் “ஒரு ஹவுஸ்மேட் அல்லது அலுவலக நண்பர் சாதனங்களை இணைக்கக்கூடிய வாய்ப்பை மட்டுப்படுத்தும்” என்கிறது. பாப்-அப் அறிவிப்புடன் வெப் / டெஸ்க்டாப் லாகின் ஏற்படும் போதெல்லாம் வாட்ஸ்அப் பயனர்களுக்கு அறிவிப்பு செல்லும். ஆனால், புதிய அம்சம் கூடுதல் பாதுகாப்பை சேர்க்கும். பயனர்கள் எப்போதும் எந்த நேரத்திலும் தங்கள் போனிலிருந்து பயன்பாட்டு இணைப்பைத் துண்டிக்கும் திறனை தற்போது கொண்டிருக்கிறத