WhatsApp யில் வருகிறது புதிய அம்சம் இனி வெப்யிலிருந்தும் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்ய முடியும்
WhatsApp ஸ்டேட்டசை அப்டேட் செய்வதில் சிக்கல் இருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது.
வாட்ஸ்அப் இந்த புதிய அம்சத்தை பீட்டா வெர்சனை டெஸ்டிங் செய்ய தொடங்கியுள்ளது.
hatsApp இந்த புதிய அம்சம் WhatsApp Web இன் பீட்டா பதிப்பு 2.2353.59 இல் காணப்பட்டது.
அதே டிவைசில் இருந்து WhatsApp ஸ்டேட்டசை அப்டேட் செய்வதில் சிக்கல் இருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. வாட்ஸ்அப் இப்போது ஒரு புதிய அம்சத்தில் செயல்படுகிறது, அதன் பிறகு வாட்ஸ்அப்பின் வெப் பதிப்பிலிருந்தும் ஸ்டேட்டசை மேம்படுத்தலாம். வாட்ஸ்அப் இந்த புதிய அம்சத்தை பீட்டா வெர்சனை சோதிக்கத் தொடங்கியுள்ளது.
ஏற்கனவே பீட்டா பயனர்களாக இருக்கும் பயனர்கள் தங்கள் ஆப்ஸ் மற்றும் மோடின் இந்த அம்சத்தைப் பார்க்கலாம். இந்த அம்சம் வாட்ஸ்அப்பின் கம்பேனியன் மொட்டின் ஒரு பகுதியாகும், இது பயனர்களுக்கு நான்கு வெவ்வேறு டிவைசில் ஒரே அக்கவுண்டில் லோகின் செய்வதற்க்கான விருப்பத்தை வழங்குகிறது. இந்த மோடின் முதன்மை போன் இணையத்துடன் இணைக்கப்பட வேண்டிய அவசியமில்லை.
WhatsApp இந்த புதிய அம்சம் WhatsApp Web யின் பீட்டா பதிப்பு 2.2353.59 இல் காணப்பட்டது. இந்த புதிய அம்சம் பற்றிய தகவலை WABetaInfo வெளியிட்டுள்ளது. உங்கள் முதன்மைக் கணக்கில் நீங்கள் உள்நுழைந்துள்ள நான்கு சாதனங்களிலும் புதிய அம்சம் வேலை செய்யும்.
புதிய அப்டேட்டிற்குப் பிறகு, வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் இருந்து ஸ்டேட்டஸ் அப்டேட் செய்ய முடியும். புதிய அம்சத்தை Android யின் பீட்டா பதிப்பு 2.24.1.4 யில் காணலாம். உங்கள் தகவலுக்கு, தற்போது வாட்ஸ்அப் நிலையை முதன்மை சாதனம் மற்றும் மொபைலில் இருந்து மட்டுமே அப்டேட் செய்ய முடியும்.
இதையும் படிங்க : OnePlus 12R ஜனவரி 23 அறிமுகமாகும், இதன் First Look வெளியானது
மெசேஜிங் தளம் சமீபத்தில் ஒரு புதிய வகை கம்பேனியன் டிவைசை டெஸ்டிங்கை தொடங்கியது – ஐபாடிற்கான WhatsApp. பீட்டா டெஸ்ட்டர்களுக்கு TestFlight திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தால், இப்போது ஆப்பிள் டேப்லெட்களில் WhatsApp ஐ இன்ஸ்டால் செய்ய முடியும். இருப்பினும், வாட்ஸ்அப்பிற்கான ஆண்ட்ராய்டு மற்றும் IOS பீட்டா புரோகிராம்கள் இரண்டும் தற்போது நிரம்பியுள்ளன, மேலும் இந்தச் சேவையானது வாட்ஸ்அப் பீட்டா அப்டேட்களைப் பெற அதிக பயனர்களை பதிவு செய்ய அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile