WhatsApp யின் புதிய வொயிஸ் சேட் அம்சம் எப்படி வேலை செய்யும் பாருங்க?

WhatsApp யின் புதிய வொயிஸ் சேட் அம்சம் எப்படி வேலை செய்யும் பாருங்க?
HIGHLIGHTS

WhatsApp மூலம் புதிய வாய்ஸ் சாட் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வொயிஸ் காலுடன் ஒப்பிடும்போது இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,

வொயிஸ் காலின் போது, ​​ஒவ்வொரு பயனருக்கும் கால் செல்கிறது,

WhatsApp மூலம் புதிய வாய்ஸ் சாட் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சம் மிகவும் அதிகமாக இருக்கும் வாட்ஸ்அப் க்ரூப்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வொயிஸ் காலுடன் ஒப்பிடும்போது இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,

ஏனெனில் வொயிஸ் காலின் போது, ​​ஒவ்வொரு பயனருக்கும் கால் செல்கிறது, ஆனால் வொயிஸ் சேட்டின் நோட்டிபிகேசன் மட்டுமே செல்கிறது, இதனால் பயனர் அதிகம் தொந்தரவு செய்யமாட்டார்.

WhatsApp வொயிஸ் சேட் எப்படி செய்வது

  • முதலில், நீங்கள் வொயிஸ் சேட்டை தொடங்க விரும்பும் க்ரூப் சேட்டை திறக்க வேண்டும்.
  • அதன் பிறகு, மொபைலின் மேல் வலது மூலையில் தெரியும் ஃபோன் ஐகானைத் தட்ட வேண்டும்.
  • இதற்குப் பிறகு நீங்கள் வொயிஸ் சேட்டை தொடங்கு என்பதைத் தட்ட வேண்டும்.
  • இதற்குப் பிறகு, க்ரூப் மெம்பர்கள் புஷ் நோட்டிபிகேசன் பெறுவார்கள், இது வொயிஸ் சேட்டை சேர அவர்களை இன்வைட் செய்யும்.
  • வொயிஸ் சேட்டில் யார் இணைகிறார்கள் என்பதை உங்களால் பார்க்க முடியும்.
  • நீங்கள் வொயிஸ் சேட்டை விட்டு வெளியேற விரும்பினால், நீங்கள் சிவப்பு குரோஸ் பட்டனை தட்ட வேண்டும்.

வொயிஸ் சேட் என்க்ரிப்ஷன் அடிப்படையில் இருக்கும்

புதிய வொயிஸ் சேட் அம்சம் மல்டி டாஸ்கிங், கால் கண்ட்ரோல் மற்றும் டெக்ஸ்ட் மெசேஜை சப்போர்ட் செய்யும் என்று கூறப்படுகிறது. இது என்க்ரிப்ஷன் அடிப்படையிலான மேசெஜக இருக்கும். அதாவது உங்கள் வொயிஸ் கால் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.

இதையும் படிங்க: சீனா அறிமுகம் செய்தது World’s Fastest Internet 1செகண்டில் 150 HD மூவீ டவுன்லோட் செய்யலாம்.

இந்த நன்மை யாருக்கு கிடைக்கும்

33 முதல் 128 மெம்பர்களை கொண்ட க்ரூப்க்கான வொயிஸ் சேட் WhatsApp மூலம் வெளியிடப்படுகிறது இந்த அம்சம் iOS மற்றும் Android பயனர்களுக்கானது. 33 க்ரூப்களுக்கு குறைவான அம்சங்களுக்கு இது கிடைக்காது. இது தவிர, இந்த அம்சம் ப்ரைமரி டிவைசில் மட்டுமே கிடைக்கும், வாட்ஸ்அப் க்ரூப் மெம்பர்கள் வொயிஸ் சேட் இல்லாத பயனர்கள், அவர்கள் வொயிஸ் சேட்டில் ஈடுபட்டுள்ள மெம்பர்களின் ப்ரோபைலை சேட் ஹீட்டிங் மற்றும் கால் டேபிள் இருந்து பார்க்க முடியும். .

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo