இப்பொழுது Iphone பயனர்களுக்கும் WhatsApp யில் வந்து விட்டது ஷோர்ட் வீடியோ அம்சம்.

Updated on 23-Aug-2023
HIGHLIGHTS

வாட்ஸ்அப் ஐபோன் பயனர்களுக்கான ஷோர்ட் வீடியோ அம்சத்தையும் வெளியிட்டுள்ளது.

இந்த அம்சம் சமீபத்தில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக வெளியிடப்பட்டது

ப்போது ஐபோன் பயனர்கள் எந்த மேசெஜயும் வீடியோவுடன் பதிலளிக்க முடியும்.

மெட்டாவுக்குச் சொந்தமான இன்ஸ்டன்ட் மெசேஜ் செயலியான வாட்ஸ்அப் ஐபோன் பயனர்களுக்கான ஷோர்ட் வீடியோ அம்சத்தையும் வெளியிட்டுள்ளது. இந்த அம்சம் சமீபத்தில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக வெளியிடப்பட்டது. இப்போது ஐபோன் பயனர்கள் எந்த மேசெஜயும் வீடியோவுடன் பதிலளிக்க முடியும். 60 வினாடிகள் வரை வீடியோவை ஒரு மெசேஜாக அனுப்ப அனுமதிக்கும் லைவ் வீடியோ மெசேஜாகஇது இருக்கும் ஷோர்ட் வீடியோ ரிப்ளை மேசெஜ்களும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்படும் என்று நிறுவனம் கூறுகிறது.

திங்கள்கிழமை முதல் புதிய அம்சத்தை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடத் தொடங்கியுள்ளதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. நீங்கள் இப்போது இன்ஸ்டன்ட் சேட்டில் வீடியோ மெசேஜ்களை ரெக்கார்ட் செய்து அனுப்பலாம். வீடியோவை அனுப்ப பயனர்கள் வீடியோவை இயக்க வேண்டும். இதற்காக, சேட்டில் உள்ள மைக்ரோஃபோன் ஐகானைத் தட்டுவதன் மூலம் இந்த அம்சத்தை அணுகலாம். வீடியோ கால்களின் ஸ்க்ரீனை பகிர்வுக்கான ஆதரவையும் இயங்குதளம் வெளியிடுகிறது.

இந்த அம்சம் எப்படி வேலை செய்யும்.

வாட்ஸ்அப்பின் புதிய அம்சத்தைப் பயன்படுத்த, பயனர்கள் டெக்ஸ்ட் பாக்ஸுக்கு அடுத்ததாக வீடியோ மெசெஜின் விருப்பத்தைப் பெறுவார்கள். நீங்கள் அதைத் தட்டினால், போனின் கேமரா திறக்கும். வீடியோவைப் ரெக்கார்ட் செய்த பிறகு, அதை நேரடியாகவும் அனுப்பலாம். இயல்பாகவே வீடியோ மேசெஜ்களின் உள்ள ஆடியோ ஒலியடக்கப்படும், ஆனால் உங்கள் வசதிக்கேற்ப அதை இயக்கலாம். இந்த அம்சம் உங்கள் ஐபோனில் இன்னும் வரவில்லை என்றால், இந்த அம்சத்தைப் பெற உங்கள் வாட்ஸ்அப் ஆப்பை அப்டேட் செய்யலாம்.

வீடியோ கால் ஸ்க்ரீன் ஷேர்

வீடியோ கால்களின் போது ஸ்கிரீன் ஷேரிங் வசதியும் வெளியிடப்படுகிறது. இந்த அம்சத்தில் வீடியோ காலை தொடங்கும்போது, ​​பயனர்கள் புதிய "ஸ்கிரீன் ஷேர்" பட்டனைப் பார்ப்பார்கள். இந்த அம்சங்கள் வரும் வாரங்களில் வெளியிடப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனம் சமீபத்தில் iOS யில் வீடியோ கால்களுக்கான லேண்ட்ஸ்கேப் பயன்முறை மற்றும் அறியப்படாத அழைப்பாளர் விருப்பத்தை வெளியிட்டது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :