WhatsApp யில் புதிய அம்சம் இனி பெயரில்லாமல் க்ரூப் உருவாக்கலாம்
மெட்டா CEO மார்க் ஜுக்கர்பெர்க் வாட்ஸ்அப் தொடர்பான புதிய அம்சத்தை அறிவித்துள்ளார்.
whatsapp யின் இந்த பெயரில்லாத க்ரூப்பில் அதிகபட்சம் 6 பேர் வரை மட்டுமே சேர்க்கலாம்,
இந்த புதிய அம்சம் WhatsApp யின் ப்ரைவசிகாக கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது,
மெட்டா CEO மார்க் ஜுக்கர்பெர்க் வாட்ஸ்அப் தொடர்பான புதிய அம்சத்தை அறிவித்துள்ளார். WhatsApp பயனர்கள் இனி பெயர் இல்லாமல் WhatsApp க்ரூப்க்கான உருவாக்க முடியும். வாட்ஸ்அப் பயனர்கள் எந்த ஒரு க்ரூபையும் பெயரிடாமல் உருவாக்க முடியும், உண்மையில், இதுவரை வாட்ஸ்அப் க்ரூப்பை உருவாக்க ஒரு பெயரைக் கொடுக்க வேண்டியது அவசியம். ஆனால் தற்போது வாட்ஸ்அப் விதிகளை மாற்றியுள்ளது. அதாவது சிறியதாக க்ரூப்பை உருவாக்க வேண்டும் என்றால் அதற்க்கு பெயர் கொடுக்க வேண்டியதில்லை.
இந்த க்ரூப்பின் நன்மை என்ன
இந்த பெயரில்லாத க்ரூப்பில் அதிகபட்சம் 6 பேர் வரை மட்டுமே சேர்க்கலாம்,, உதரணமாக ஒரு க்ரூப்பில் 'மேட்' மற்றும் 'லூபின்' என்ற இரண்டு உறுப்பினர்கள் இருந்தால், க்ரூப்பின் பெயரை அட்மின் முடிவு செய்ய தேவை இல்லை வாட்ஸ்அப் தானாகவே க்ரூப்பிர்க்கு 'மேட் மற்றும் லூபின்' என்று பெயரிடும். சாதாரணமாக ஒரு க்ரூப் ஆரம்பித்தால் நீங்கள் பெயரில் ஒரு க்ரூப்பை உருவாக்க வேண்டும் அப்படி சேர்க்கப்பட்ட் அந்த வாட்ஸ்அப் க்ரூப்பில் 1024 நபர் வரை சேர்க்க முடியும்.
இந்த புதிய அம்சம் WhatsApp யின் ப்ரைவசிகாக கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது, இந்த புதிய அப்டேட்டிர்க்கு பிறகு வெவ்வேறு மெம்பர்கள் க்ரூப்பின் பெயரை வித்தியாசமாகப் பார்ப்பார்கள். இது தவிர, அனைத்து மெம்பர்களிடமும் உங்கள் நம்பர் சேமிக்கப்படாத ஒரு க்ரூப்பில் நீங்கள் சேர்க்கப்பட்டால், அனைத்து மெம்பர்களும் உங்கள் போன் நம்பரை மட்டுமே பார்க்க முடியும்..
இந்த அம்சம் எப்பொழுது அறிமுகமாகும்
வாட்ஸ்அப் பயனர்களுக்கு புதிய அம்சம் விரைவில் வெளியிடப்படும். தற்போது இது பீட்டா பயனர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், விரைவில் இது ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்காக வெளியிடப்படலாம்.
சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட அம்சம்
WhatsApp சமீபத்தில் HD போட்டோ அம்சத்தை வெளியிட்டுள்ளது , அதன் பிறகு நீங்கள் WhatsApp இல் HD போட்டோக்களை அனுப்ப முடியும். இது தவிர, சென்ட் மீடியா தலைப்பையும் நீங்கள் திருத்தலாம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile