சமீபத்தில் இன்ஸ்டன்ட் மெசேஜிங் செயலியான WhatsApp அதன் பயனர்களுக்கு beta update கொண்டு வந்துள்ளது. இந்த பீட்டா அப்டேட் வெறும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே வந்துள்ளது. இந்த லேட்டஸ்ட் WhatsApp beta அப்டேட் வந்த பிறகு இனி whatsApp பயனர்கள் வேறு எந்த பயனர்களின் ப்ரொபைல் போட்டோவையும் சேவ் செய்யவோ அல்லது டவுன்லோடு செய்ய முடியாது. அவர்களுக்கு இந்த ஆப்சன் இனி கிடைக்காது.. இதனுடன் இந்த தகவல் WABetaInfo
WABetafofo அறிக்கையின் படி நம்பினால், வாட்ஸ்அப் அதன் புதிய ஆண்ட்ராய்டு பீட்டா அப்டேட்டில் ப்ரொபைல் புகைப்படம் மற்றும் iOS 2.19.60.5 WhatsApp Business beta வின் save செய்வதற்கான ஆப்ஷனை அகற்றியுள்ளது.
இதை தவிர புதிய ஆண்ட்ராய்டு பீட்டா அப்டேட் 155 ரிடிசைன் ஈமோஜி உடன் வருகிறது.சிறப்பு விஷயம் என்னவென்றால் Whosapp முற்றிலும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட ஈமோஜி மறுவடிவமைப்பு மற்றும் மீதமுள்ள சில சிறிய மாற்றங்களை செய்துள்ளது. இதை தவிர அப்டேட்டில் chat லிஸ்டில் Night mode சேர்க்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.139 பதிப்பில் நைட் மோட் வழங்கும் வேலைகள் நடைபெற்று வருவதை உணர்த்தியிருக்கிறது. தற்சமயம் இந்த அம்சம் எனேபிள் செய்யப்படவில்லை என்ற போதும், அடுத்த பீட்டா அப்டேட்டில் வழங்கப்படலாம் என தெரிகிறது. புதிய அப்டேட் நீண்ட காலமாக சோதனை செய்யப்பட்ட டார்க் மோட் அம்சம் நைட் மோட் என பெயர் மாற்றம் பெறுவதை உறுதி செய்திருக்கிறது