அதன் கொள்கை மற்றும் விதிமுறைகளை மாற்றியிருப்பதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

Updated on 26-Jun-2018
HIGHLIGHTS

வாட்ஸ்அப் நிறுவனம் இந்திய அரசு, தேசிய பணப்பட்டுவாடா நிறுவனம் மற்றும் பல்வேறு வங்கிகளுடன் இணைந்து பணப்பரிமாற்ற வசதியை தனது செயலியில் வழங்க இருக்கிறது.

வாட்ஸ்அப் ஆப் யில் பணப்பரிமாற்றங்களை செய்யும் வசதி இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. வாட்ஸ்அப்-இல் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி முழுமையாக வெளியிடப்படும் முன், தனது கொள்கை மற்றும் விதிமுறைகளை மாற்றியிருப்பதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தற்சமயம் சுமார் பத்து லட்சம் பேர் வாட்ஸ்அப் ஆப்யில்  பணப்பரிமாற்றம் செய்யும் அம்சத்தை சோதனை செய்து வருகின்றனர். உலகம் முழுக்க சுமார் 150 கோடி பேர் வாட்ஸ்அப் பயன்படுத்தும் நிலையில், இந்தியாவில் மட்டும் சுமார் 20 கோடி பேர் வாட்ஸ்அப் பயன்பத்துகின்றனர்.

வாட்ஸ்அப் பணப்பரிமாற்றங்களுக்கான கொள்கைகள் மற்றும் விதிமுறைகளை மாற்றி, எளிய மொழியில் பணப்பரிமாற்றம் செய்யும் அம்சம் எவ்வாறு வேலை செய்யும் என்பதை குறிப்பிட்டிருக்கிறோம். இத்துடன் பீட்டா பதிப்பில் பணப்பரிமாற்றம் தொடர்பான அம்சங்கள் சேர்க்கப்பட்ட விவரங்களும் அடங்கும்.

வாட்ஸ்அப் நிறுவனம் இந்திய அரசு, தேசிய பணப்பட்டுவாடா நிறுவனம் மற்றும் பல்வேறு வங்கிகளுடன் இணைந்து பணப்பரிமாற்ற வசதியை தனது செயலியில் வழங்க இருக்கிறது.

வாட்ஸ்அப் ஆப் யில் பணப்பரிமாற்ற வசதி வழங்குவதற்கான சரியான தேதி இதுவரை நிர்ணயம் செய்யப்படவில்லை என்றாலும், கொள்கை மற்றும் விதிமுறை மேம்படுத்தப்பட்டு இருப்பது, வெளியீடு விரைவில் நடைபெற இருப்பதை உணர்த்தும் வகையில் இருக்கிறது என வாட்ஸ்அப் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

பேடிஎம் போன்ற பல்வேறு டிஜிட்டல் வாலெட் சேவைகளுக்கு போட்டியாக பார்க்கப்படும் வாட்ஸ்அப் பணப்பரிமாற்ற சேவை கடந்த சில மாதங்களாக பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்படும் நிலையில், விரைவில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :