WhatsApp யில் வருகிறது புதிய அம்சம், இனி வீடியோ காலின் பொது ம்யூசிக் கேக்கலாம்

Updated on 08-Dec-2023
HIGHLIGHTS

மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப் புதிய அம்சத்தை உருவாக்கி வருகிறது,

இது பயனர்கள் வீடியோ கால்களின் போது ம்யூசிக்கை கேட்க அனுமதிக்கிறது

WaBetaInfo யின் அறிக்கையின்படி, இந்த அம்சம் தற்போது டெவலப்பிங் கட்டத்தில் உள்ளது

மெட்டாவுக்குச் சொந்தமான WhatsApp புதிய அம்சத்தை உருவாக்கி வருகிறது, இது பயனர்கள் வீடியோ கால்களின் போது ம்யுசிக்கை கேட்க அனுமதிக்கிறது. ஆபிஸ் வாட்ஸ்அப் வீடியோ மீட்டிகின் போது உங்களுக்கு மிகவும் போர் அடித்தால் காலின் போது நீங்கள் ம்யுசிக்கை இயக்க முடியும். WaBetaInfo யின் அறிக்கையின்படி, இந்த அம்சம் தற்போது டெவலப்பிங் கட்டத்தில் உள்ளது, இது பீட்டா டேஸ்ட்டர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை.

WhatsApp இந்த அம்சத்தை எப்படி எனேபில் செய்வது?

இந்த அம்சத்தின் நல்ல விஷயம் என்னவென்றால், வீடியோ காலின்கின் வொயிஸ், உடன் நீங்கள் ம்யுசிக்கை கேட்கலாம். நீங்கள் மீட்டிங்கை தவறவிட மாட்டீர்கள் அல்லது ம்யுசிக்கை தவறவிட மாட்டீர்கள். இது தவிர, யாரிடமாவது ஸ்க்ரீனை ஷேர் செய்து கொண்டால், அந்த நேரத்திலும் ம்யுசிக் கேட்கும். இது உங்களுக்கு அதிவேக மற்றும் ஆடியோ வீடியோ அனுபவத்தை வழங்கும். பயனர்கள் இந்த அம்சத்தை இயக்கும் போது, ​​அவர்கள் ஆடியோவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.

WhatsApp New feature update

இந்த புதிய அம்சம் எப்படி வேலை செய்யும்?

உங்கள் நண்பருடன் வீடியோ காளிங்கை தொடங்கும்போது, ​​ஸ்க்ரீனில் அடிப்பகுதியில் Flip Camera விருப்பத்தைக் காண்பீர்கள். இந்த அம்சத்தை நீங்கள் செயல்படுத்தும்போது, ​​வீடியோ காலிங்கில் பங்கேற்பாளர்கள் இருவரும் ஆடியோ அல்லது இசை வீடியோவை அனுபவிக்க முடியும்.

குறிப்பு: நீங்கள் வொயிஸ் வாட்ஸ்அப் காலை மேற்கொள்ளும்போது ம்யூசிக் ஷேரிங் அம்சம் வேலை செய்யாது. ஐபோனுக்கான புதிய அம்சத்தை வாட்ஸ்அப் சோதித்து வருகிறது. வாட்ஸ்அப் அதன் பயனர்களுக்கு அவ்வப்போது புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது, இதனால் பயனர்கள் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துவதை எளிதாக்குகிறது.

இதையும் படிங்க: Jio யின் புதிய அன்லிமிடெட் 5G டேட்டா பிளான் 84 நாட்கள் வேலிடிட்டி இந்த OTT சப்ச்க்ரிப்சன் இலவசமாக கிடைக்கும்

சமிபத்திய WhatsApp அம்சம்

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் WhatsApp யின் பீட்டா வெர்சன் பயன்படுத்தும் பயனர்களுக்கு HD தரத்தில் போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்ய முடியும், அதாவது இந்த அம்சத்தின் மூலம் இந்த அம்சத்தில், பயனர்கள் போட்டோக்கள் அல்லது வீடியோக்களை அனுப்பும் போது சிறப்பு ‘HD’ விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து ஹை குவாலிட்டியில் அனுப்பலாம் இந்த அம்சம் iOS பயனர்களுக்கு கிடைக்காமல் இருந்தது

சமீபத்திய WABetaInfo யின் அறிக்கையின்படி WhatsApp ஆனது புதிய நிலையான அப்டேட் ஆப் ஸ்டோரில் (பில்ட் நம்பர் 23.24.73) சமர்பித்துள்ளது, அதாவது இதன் பொருள் iOS பயனர்கள் ஆப்பின் மூலம் ஷேர் செய்யும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் அவற்றின் ஹை குவாலிட்டியில் இருக்கும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :