வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வீடியோ காலிங் அம்சம் வழங்ப்படுவதை ஃபேஸ்புக் F8 டெவலப்பர் நிகழ்வில் உறுதி செயய்ப்பட்டுள்ளது. ஃபேஸ்புக்கின் F8 நிகழ்வு கலிஃபோர்னியாவின் சான் ஜோஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் சுமார் 150 கோடி பேர் பயன்படுத்தும் பிரபல செயலியாக இருக்கிறது. தினமும் சுமார் 20 கோடி பேர் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்துகின்றனர்.
வாட்ஸ்அப் செயலியில் ஏற்கனவே வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதி வழங்கப்படுகிறது. இலவசமாக கிடைக்கும் வாட்ஸ்அப் செயலியில் இந்த அம்சஙகள் பெரும்பாலானோர் விரும்பும் அம்சமாக இருந்து வருகிறது. க்ரூப் வீடியோ கால்ஸ் அம்சம் சேர்க்கப்படும் பட்சத்தில் மேலும் பலருக்கும் இந்த அம்சம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக பலமுறை க்ரூப் வீடியோ கால் வசதி வழங்குவது குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருந்த நிலையில், இம்முறை இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் F8 நிகழ்விலேயே வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அம்சத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 45 கோடி என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வீடியோ மற்றும் ஆடியோ கால் அம்சத்தை பொருத்த வரை தினமும் சுமார் 200 கோடி நிமிடங்களுக்கு வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகின்றனர். இதனாலேயே வாட்ஸ்அப் செயலியின் வீடியோ கால் அம்சத்தில் க்ரூப் கால்ஸ் சேர்க்கப்படுகிறது. ஏற்கனவே வாய்ஸ் கால் செய்யும் போது நேரடியாக வீடியோ காலுக்கும், வீடியோ கால் செய்வோர் வாய்ஸ் கால் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.
இதே போன்று வாட்ஸ்அப்பில் புதிய ஸ்டிக்கர்கள் சேர்க்கப்படுகிறது. இவை ஆன்ட்ராய்டு பீட்டா அப்டேட் மூலம் தெரியவந்துள்ளது. எனினும் இவை அனைத்தும் அனைவராலும் பயன்படுத்த முடியாது என கூறப்படுகிறது. ஆன்ட்ரா்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளத்தத்திற்கான வாட்ஸ்அப் செயலியில் லொகேஷன் ஸ்டிக்கர் வசதியும் வழங்கப்படுகிறது.