WhatsApp யின் புதிய Alternate Profile அம்சம், எப்படி பயன்படுத்துவது மற்றும் எப்படி வேலை செய்யும்.

Updated on 02-Nov-2023
HIGHLIGHTS

WhatsApp மூலம் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய அம்சத்திற்கு "Alternate Profile" என்று பெயரிடப்பட்டுள்ளது

இது பயனர்களுக்கு அவர்களின் ப்ரோபைளின் மீது கூடுதல் பாடுகப்பை வழங்குகிறது.

WhatsApp மூலம் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சத்திற்கு “Alternate Profile” என்று பெயரிடப்பட்டுள்ளது. இது பயனர்களுக்கு ஒரு மாயாஜால அம்சமாக நிரூபிக்கப்படலாம். இது பயனர்களுக்கு அவர்களின் ப்ரோபைளின் மீது கூடுதல் பாடுகப்பை வழங்குகிறது. பெயர் குறிப்பிடுவது போல, இந்த அம்சத்தின் உதவியுடன் பயனர்கள் தங்களுக்கு இரண்டு வாட்ஸ்அப் ப்ரோபைலை உருவாக்க முடியும். சாதரணமாக பார்த்தால் லாஸ்ட் சீன், , ஸ்டேட்டஸ் மற்றும் ப்ரோபைல் போட்டோ போன்ற தகவலை ஒரு சில நபர் அலுவலக சக ஊழியர்கள் மற்றும் முதலாளிகளிடமிருந்து மறைத்து வைத்திருப்பது பொதுவாகக் காணப்படுகிறது, இதனால் மற்ற பயனர்கள் அதைப் பார்க்க முடியாது.

WhatsApp யின் alternate ப்ரோபைல் அம்சம் என்றால் என்ன?

WAbetainfo யின் அறிக்கையின்படி ஆல்டர்நேட் ப்ரோபைல் இந்த அம்சத்தின்மூலம் பல மடங்கு பாதுகாப்பு அம்சம் இருக்கும், ஆல்டர்நெட் ப்ரோபைல் ஆப்சன் வாட்ஸ்அப் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது, அதில் நீங்கள் இரண்டு ப்ரொபைலை உருவாக்கலாம். நீங்கள் ஒரு ப்ரோபைலை வேறு போட்டோ ப்ரோபைல் மற்றும் ஸ்டேட்டஸ் வைக்க முடியும், அதே நேரத்தில் நீங்கள் மற்றொரு ப்ரோபைலில் வேறு போட்டோவை வைக்க முடியும். பயனர்கள் வெவ்வேறு ப்ரோபைல்களில் வெவ்வேறு நபர்களைச் சேர்க்க முடியும்.

இந்த அம்சம் எப்படி வேலை செய்யும்

  • உங்கள் ரெகுலர் ப்ரோபைல் ப்ரைமரி, இது எல்லா பயனர்களுக்கும் தெரியும்.
  • ஆல்டேர்நெடிவ் ப்ரோபைலில் இது தனிப்பட்டதாக இருக்கும். இதில் அந்த கான்டேக்டுக்கு மட்டும் தான் தெரியும் எது நீங்கள் செலக்ட் செய்து வைத்திருக்கிர்கலாவ் அவர்களுக்கு மட்டும்
  • இதன் பொருள் உங்கள் ப்ரோபைலில் ஒன்று அனைத்து நண்பர்களுக்கும் இருக்கும், மற்றொன்று குறிப்பிட்ட நபர்களுக்கானதாக இருக்கும்.
  • வேலை மற்றும் அலுவலகத்திற்கு ஏற்ப நீங்கள் வாட்ஸ்அப்பை அமைக்க முடியும். அலுவலக பணி சுயவிவரத்திற்காக வேறு பெயர் மற்றும் படத்துடன் நீங்கள் கணக்கை உருவாக்க முடியும். இந்த வழியில் நீங்கள் உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையை பராமரிக்க முடியும்.

இந்த அம்சம் டெஸ்டிங்கில் இருக்கிறது

வாட்ஸ்அப்பின் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் மாற்று சுயவிவர அம்சம் காணப்பட்டது. இந்த அம்சம் தற்போது வளர்ச்சி கட்டத்தில் உள்ளது மற்றும் இன்னும் சோதனைக்கு கிடைக்கவில்லை. ஆனால் சுயவிவர மாறுதல் அம்சம் விரைவில் வெளியிடப்படும்.

இதையும் படிங்க :Xiaomi 14 Series விற்பனையில் சாதனை 4 மணி நேரத்தில் மொத்த போனையும் விற்று தீர்த்தது

WhatsApp யின் alternate ப்ரோபைல் எப்படி பயன்படுத்துவது

இந்த அம்சம் வந்த பிறகு நீங்கள் Alternate Profile’ செட் செய்ய இந்த ஸ்டெப்பை போலோ செய்யுங்கள்

  • வாட்ஸ்அப் அப்ளிகேசன் திறக்கவும்
  • செட்டிங்களுக்கு சென்று Privacy என்பதை செலக்ட் செய்யவும்.
  • பிறகு Profile Photo யில் க்ளிக் செய்யவும்.
  • உங்களின் ப்ரைமரி ப்ரோபைல் போட்டோவின் காட்ட உங்கள் காண்டேக்ட்களுக்கு மட்டும் காட்ட ‘My Contacts என்பதைத் தேர்வு செய்யவும்.
  • இப்பொழுது உங்களுக்கு Alternate Profile.’உருவக்க ஒப்ஷன் வரும்.
  • உங்களின் அசல் ப்ரோபைலை எப்படி அமைக்கிறீர்களோ அதைப் போலவே உங்கள் ஆல்டர்நெட் ப்ரோபைலை உள்ளமைக்கவும்.
  • பிறகு செட்டிங்க்ஸ் Save கொடுக்கவும்
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :