Whatsapp யில் வந்த புதிய அப்டேட், இனி இனி வாய்ஸ் நோட்டையும் ஸ்டேட்டஸாக வைக்கலாம்.

Whatsapp யில் வந்த புதிய அப்டேட், இனி இனி வாய்ஸ் நோட்டையும் ஸ்டேட்டஸாக வைக்கலாம்.
HIGHLIGHTS

வாட்ஸ் ஆப் நிறுவனம் சமீப காலமாக அதிகப்படியான அப்டேட்டுகளை தனது பயனர்களுக்கு வழங்கி வருகிறது.

வாட்ஸ் ஆப் மூலம் படம், வீடியோ, லிங்க் போன்றவற்றை ஸ்டேட்டஸாக வைத்து வந்த நமக்கு மற்றொரு விதத்தில் ஸ்டேட்டஸ் வைக்க வாய்ப்பளிக்கிறது.

வாட்ஸ் ஆப் நிறுவனம் சமீப காலமாக அதிகப்படியான அப்டேட்டுகளை தனது பயனர்களுக்கு வழங்கி வருகிறது. அவதார்களை ப்ரொபைல் படமாக வைப்பது, தனக்கு தானே செய்தி அனுப்பும் அம்சம், ஒரே வாட்ஸ் அப்பை இரண்டு டிவைஸ்களில் பயன்படுத்துவது என்று பல அப்டேட்கள் வந்த நிலையில் இப்பொது புதிய அப்டேட் ஒன்றை கொண்டு வந்துள்ளது.

வாட்ஸ் ஆப் மூலம் படம், வீடியோ, லிங்க் போன்றவற்றை ஸ்டேட்டஸாக வைத்து வந்த நமக்கு மற்றொரு விதத்தில் ஸ்டேட்டஸ் வைக்க வாய்ப்பளிக்கிறது.என்ன என்று யோசிக்கிறீர்களா? வாய்ஸ் நோட் தாங்க அது.

அதை எளிதாகும் விதமாக குரல் நிலை அம்ச ஸ்டேட்டஸ் ஆக வைக்கும் புதிய அம்சத்தை வாட்ஸ் ஆப் கொண்டுவந்துள்ளது. புதிய அம்சம்  மக்கள் தங்கள் உள்ளடக்கத்தை  சிறந்த முறையில் விளம்பரப்படுத்த உதவும். உதாரணமாக, யாராவது தங்கள் பாடலை தொடர்புகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினால், அவர்கள் ஸ்டேட்டஸில் வொய்ஸ் ஸ்டேட்டஸ் அம்சத்தைப் பயன்படுத்தி அதைப் பதிவிடலாம்.

டைப் பண்ண கஷ்டப்படும் நபர்களானாலும் சரி, பெரிய செய்தியை குறைந்த நேரத்தில் தெளிவாக சொல்ல நினைப்பவர்களுக்கும் வாய்ஸ் நோட் தான் சரியாக கைகொடுக்கும். இது வரை தனிப்பட்ட அரட்டைகளில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பிக்கொண்டு இருந்தோம். அதை பலருக்கு தெரியப்படுத்த பகிர்ந்து கொண்டு இருந்தோம்.

இந்த புதிய அம்சம் WaBetaInfo  2.22.21.5 ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் கொண்டுவரப்பட்டுள்ளது. சோதைனைக்காக பீட்டா பயனாளர்களுக்கு வழங்கப்படும் இந்த அம்சம் விரைவில் அணைத்து பயனாளர்களுக்கு விரிவாக்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo