இந்தியாவில் தனி நபர் தகவல் பாதுகாப்பு மசோதா சட்டமாகும் வரை புதிய தனியுரிமை கொள்கைகளை அமல்படுத்த மாட்டோம் என வாட்ஸ்அப் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கிறது. வாட்ஸ்அப் நிறுவனம் திருத்தப்பட்ட தனியுரிமை கொள்கை நாட்டு மக்களிடையே பெரும் எதிர்ப்பை பெற்றது.
`இதுதவிர புது கொள்கைகளுக்கு அனுமதி வழங்காதவர்களும் செயலியின் அனைத்து அம்சங்களையும் எவ்வித கட்டுப்பாடும் இன்றி தொடர்ந்து பயன்படுத்த முடியும்,' என வாட்ஸ்அப் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் தெரிவித்து உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
வாட்ஸ்அப் தனது புதிய தனியுரிமை கொள்கைகளை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி இருந்தது. இந்த விவகாரத்தில் வாட்ஸ்அப் செயல்பாடுகளை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கில் வாட்ஸ்அப் தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, `வாட்ஸ்அப் தனது புதிய கொள்கைகளை தற்போதைக்கு அமல்படுத்தாது,' என தெரிவித்து இருக்கிறார்.
வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கை தொடர்பான விசாரணைக்கான இந்திய போட்டி ஆணையத்தின் (சிசிஐ) உத்தரவை நிறுத்த மறுக்கும் ஒற்றை பெஞ்ச் உத்தரவுக்கு எதிராக பேஸ்புக் மற்றும் அதன் துணை நிறுவனமான வாட்ஸ்அப் முறையீடுகளை நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ்அப்பில் இருந்து டேட்டா பாலிசியை குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. பயனர்களின் தரவை மற்ற நிறுவனங்களுக்கு வழங்குவதாக உங்களுக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டு இருப்பதாக உயர் நீதிமன்றம் வாட்ஸ்அப்பைக் கேட்டது. வாட்ஸ்அப் இந்தியாவுக்கு வேறுபட்ட கொள்கையைக் கொண்டுள்ளது என்றும், ஐரோப்பாவிற்கு இது வேறுபட்டது என்றும் நீதிமன்றம் கூறியது, ஏன்