Whatsapp யில் கலக்கி வரும் டெக்ஸ்ட் எடிட்டர் அம்சம் வந்தாச்சு இனி chat இருக்கும் செம மஜாவாக.

Whatsapp யில் கலக்கி வரும் டெக்ஸ்ட் எடிட்டர் அம்சம் வந்தாச்சு இனி chat இருக்கும் செம மஜாவாக.
HIGHLIGHTS

வாட்ஸ்அப் புதிய டெக்ஸ்ட் எடிட்டர் அம்சத்தை வெளியிடுகிறது.

முதற்கட்டமாக இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படு

டெக்ஸ்ட் எடிட்டர் மட்டுமின்றி எடிட் மெசேஞ்ச் அம்சத்தையும் வாட்ஸ்அப் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

வாட்ஸ்அப் புதிய டெக்ஸ்ட் எடிட்டர் அம்சத்தை வெளியிடுகிறது. இருப்பினும், தற்போது இது சில பீட்டா சோதனையாளர்களுக்காக மட்டுமே கொண்டு வரப்பட்டுள்ளது. மெட்டாவுக்குச் சொந்தமான இந்த உடனடி செய்தியிடல் செயலி அதன் பயனர்களுக்கு செய்திமடல்களை உருவாக்கும் வசதியைக் கொண்டுவருவதாக சமீபத்திய அறிக்கையில் கூறப்பட்டது. இப்போது புதிய டெக்ஸ்ட் எடிட்டர் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், வாட்ஸ்அப் பயனர்களின் டெக்ஸ்ட் எடிட்டிங் அனுபவம் இன்னும் வேடிக்கையாக இருக்கும். அதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள கீழே படிக்கவும். இதையும் படியுங்கள் – பிப்ரவரியில் மில்லியன் கணக்கான இந்தியர்களின் கணக்குகளை வாட்ஸ்அப் மற்றும் ட்விட்டர் தடை செய்தன, காரணம் இதோ

இருப்பினும் , முதற்கட்டமாக இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என தெரிகிறது. தற்போது டெஸ்டிங்கில் உள்ள டெக்ஸ்ட் எடிட்டர் அம்சம் விரைவில் அனைவருக்குமான அப்டேட்டில் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். டெக்ஸ்ட் எடிட்டர் மட்டுமின்றி எடிட் மெசேஞ்ச் அம்சத்தையும் வாட்ஸ்அப் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

புதிய அம்சம் கொண்டு பயனர்கள் ஃபாண்ட்களிடையே எளிதில் ஸ்விட்ச் செய்ய முடியும். ஏற்கனவே இந்த அம்சம் வழங்கப்பட்டு இருந்த போதிலும், தற்போது எளிதில் விரும்பிய ஃபாண்ட்களை தேர்வு செய்துவிட முடியும். இத்துடன் டெக்ஸ்ட் அலைன்மெண்ட் வசதியின் மூலம் டெக்ஸ்ட்-ஐ இடதுபுறம், வலதுபுறம் மற்றும் நடுவில் வைத்துக் கொள்ள முடியும்.

வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட இருக்கும் புதிய அம்சங்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டு வரும் WABetainfo, புதிய அம்சம் கொண்டு பயனர்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஜிஃப் உள்ளிட்டவைகளை டூல்ஸ் மற்றும் ஃபாண்ட்களை எடிட் செய்ய முடியும் என தெரிவித்து இருக்கிறது. தற்போது வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு 2.23.7.17 வெர்ஷனில் தேர்வு செய்யப்பட்ட சிலருக்கு மட்டும் இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo