வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை பேஸ்புக் ஸ்ட்ரோரியாக மாற்றும் புதிய வசதி

Updated on 22-Sep-2019

வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் வைக்கும் ஸ்டேட்டஸ்களை ஃபேஸ்புக் ஸ்டோரிக்களில் பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. 

புதிய அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். தளங்களில் வழங்கப்படுகிறது. வரும் நாட்களில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படும் என வாட்ஸ்அப் வலைப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்பட்டு வந்த அம்சம் தற்சமயம் அனைத்து பயனர்களுக்கும் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது.

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட்களை ஃபேஸ்புக் ஸ்டோரிக்களில் வைத்துக் கொள்ள "Share to Facebook Story" எனும் பட்டன் வழங்கப்படுகிறது. இது வாடஸ்அப் ஸ்டேட்டஸ் டேப் அருகிலேயே காணப்படுகிறது. புதிய அம்சத்திற்கு முழுமையான என்க்ரிப்ஷன் பொருந்தாது என கூறப்படுகிறது.

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு 2.19.258 மற்றும் ஐபோனிற்கான வாட்ஸ்அப் 2.19.92 பதிப்புகளில் புதிய வசதி வழங்கப்படுகிறது. இரு பதிப்புகளும் அந்தந்த ஆப் ஸ்டோர்களில் டவுன்லோடு செய்து கொள்ள முடியும். 

ஸ்டேட்டஸ் அப்டேட்களை மற்ற செயலிகளுடன் பகிர்ந்து கொள்ளும் போது அவை முழுமையான என்க்ரிப்ஷன் மூலம் பாதுகாக்கப்படாது. ஸ்டேட்டஸ் அப்டேட் வைக்கும் போது, வாட்ஸ்அப் அக்கவுண்ட் விவரங்களை ஃபேஸ்புக் மற்றும் இதர செயலிகளுடன் பகிர்ந்து கொள்ளாது என வாட்ஸ்அப் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :