whatsApp புதிய அப்டேட்டில் ஸ்டேட்டஸில் ஈமோஜி ஸ்டைல் ..!
புதிய எமோஜி ஸ்டைல் பற்றிய ஸ்கிரீன்ஷாட் ஒன்றும் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய எமோஜி ஸ்டைல் வழக்கமாக வாட்ஸ்அப் சாட்களில் காணப்படும் எமோஜிக்களை போன்றே காட்சியளிக்கிறது
வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் புதிய ஈமோஜி ஸ்டைல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த எமோஜிக்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட் பகுதியில் சேர்க்கப்பட இருக்கிறது. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.110 பதிப்பில் இந்த வசதி வழங்கப்படுகிறது.
வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.110 வெர்ஷனில் பயனர்களுக்கு புதிய ஈமோஜி ஸ்டைல் டூடுள் பிக்கர் மூலம் கிடைக்கும். புதிய எமோஜி ஏற்கனவே செயலியில் வழங்கப்பட்டு இருக்கும் எமோஜிக்களுக்கு மாற்றாக இருக்கும் என கூறப்படுகிறது. புதிய எமோஜி ஸ்டைல் ஸ்டேட்டஸ் அப்டேட்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. இது பயனரின வழக்கமான சாட்களில் எவ்வித மாற்றத்தையும் கொண்டு வராது.
இருப்பினும் , இந்த அம்சம் பீட்டா பயனர்களுக்கு தற்சமயம் வரை செயலிழக்கப்பட்டுள்ளது. முன்னதாக வாட்ஸ்அப் செயலியில் ஸ்டிக்கர் அம்சம் பற்றிய தகவல் வெளியாகியிருந்தது. இதைத் தொடர்ந்து தற்சமயம் எமோஜி பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு தளத்தில் ஸ்கிரீன்ஷாட்களை முடக்குவதற்கான வசதியை வழங்க இருப்பது பற்றிய விவரமும் வெளியானது.
புதிய எமோஜி ஸ்டைல் பற்றிய ஸ்கிரீன்ஷாட் ஒன்றும் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய எமோஜி ஸ்டைல் வழக்கமாக வாட்ஸ்அப் சாட்களில் காணப்படும் எமோஜிக்களை போன்றே காட்சியளிக்கிறது. ஸ்டேட்டஸ் அப்டேட் பகுதியில் வழங்கப்பட்டிருப்பதால் இது வழக்கமான சாட்களில் பயன்படுத்த முடியாது என்றே தெரிகிறது.
வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.110 பதிப்பில் வழங்கப்பட்டுள்ள நிலையிலும் இந்த அம்சம் பீட்டா பயனர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. அந்த வகையில் இந்த அம்சம் எப்போது அனைவருக்கும் வழங்கப்படும் என்பது குறித்தும் இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile