WhatsApp மூலம் புதிய “Protect IP Address in call” அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
உங்கள் லோகேசனை யாராலும் கண்காணிக்க முடியாது
இது பயனர்கள் தங்கள் ஐபி முகவரியை மறைக்க உதவும்.
WhatsApp மூலம் புதிய “Protect IP Address in call” அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சம் வந்த பிறகு, உங்கள் லோகேசனை யாராலும் கண்காணிக்க முடியாது. உண்மையில், தற்போது காலரின் லோகேசனை ஐபி முகவரி மூலம் கண்டறிய முடியும். ஆனால் இப்போது காலின் போது லோகேசன் தகவல் கிடைக்காது. இது ஒரு கூடுதல் லேயர் செக்யூரிட்டி அம்சமாகும், இது மெசேஜ் அனுப்பும்போது அல்லது காலை பெறும்போது செயல்படுத்தப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், விரைவில் பயனர்கள் ஒரு புதிய அம்சத்தைப் பெறுவார்கள், இது பயனர்கள் தங்கள் ஐபி முகவரியை மறைக்க உதவும்.
யாருடனும் IP முகவரியை ஷேர் செய்யாதிர்கள்
மெட்டா இன்ஜினியரின் கூற்றுப்படி, புதிய அம்சம் காலின் போது ஐபி முகவரியைப் பாதுகாக்கும். இதற்காக நீங்கள் செட்டிங்களை மாற்ற வேண்டும். மற்ற கால் அம்சங்களைப் போலவே, பியர் டு பியர் கனெக்டிவிட்டியும் வாட்ஸ்அப் ஆல் வழங்கப்படுகிறது. அதாவது கால் செய்யும் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் ஐபி முகவரியைக் காணலாம்.
ஒருவரின் காலிங் ஐபி முகவரி மற்றும் இன்டர்நெட் சேவை வழங்குநர் பற்றிய தகவலைப் பெறுவதன் மூலம், பயனரின் தற்போதைய லோகேசன் பற்றிய தகவலைப் பெறலாம் , அத்தகைய சூழ்நிலையில், பயனர் ஐபி முகவரி மற்றும் இன்டர்நெட் சேவை வழங்குநரின் தகவல்களை தெரியாத நபர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.