இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளமான Whatsapp தொடர்ந்து புதிய அம்சங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது, இப்போது, மெட்டாவுக்குச் சொந்தமான இயங்குதளம் புதிய அம்சத்தை சோதித்து வருகிறது, இது பயனர்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஹை குவாலிட்டி போட்டோ ஷேரிங் செய்ய அனுமதிக்கும்.
WABetaInfo சமீபத்தில் அறிக்கையின் படி iOS மற்றும் ஆண்ட்ராய்டு இரண்டிற்கும், WhatsApp யின் சமீபத்திய பீட்டா வெர்சனானது போட்டோ அனுப்புவதற்கான புதிய HD போட்டோ தர விருப்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்கள் வாட்ஸ்அப்பில் போட்டோக்களை அனுப்பும் போது, இயங்குதளம் தானாகவே அவற்றை சுருக்குகிறது, ஆனால் இந்த புதிய அம்சத்தின் மூலம், பயனர்கள் ஹை ரெஸலுசன் போட்டோவை அனுப்ப முடியும்
அதுவே இந்த புதிய பன்சனாலிட்டி இமேஜ் டைமென்ஷனை அப்படியே வைக்கும். ஆனால் சில சுருக்கங்கள் இன்னும் பயன்படுத்தப்படும் மற்றும் போட்டோ அவற்றின் அசல் ரெஸலுசனுக்கு போகாது. இங்கே கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், நீங்கள் ஒரு போட்டோவை ஷேர் செயும்போது, டிஃபால்ட் விருப்பம் எப்போதும் 'குவாலிட்டி தரம்' என அமைக்கப்படும், மேலும் ஹை ரெஸலுசனில் போட்டோ அனுப்ப HD பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
இந்த அம்சத்தைப் பயன்படுத்தி போட்டோ அனுப்பப்பட்டதை பயனர்களுக்குத் தெரியப்படுத்த வாட்ஸ்அப் மெசேஜ் பபுள் ஒரு புதிய டேக் சேர்க்கிறது. தற்போது இந்த அம்சம் சேட்டில் ஷேர் செய்யப்பட்ட போட்டோக்களுக்கு மட்டுமே. இந்த வாட்ஸ்அப் பீட்டா ஆனது ஆண்ட்ராய்டு 2.23.12.13 மற்றும் iOS 23.11.0.76 வெர்சன்களில் கிடைக்கிறது மற்றும் டெவலப்பர்கள் இதை படிப்படியாக வெளியிடுகின்றனர், எனவே உங்கள் டீவைஸ்ல் வர வர சிறிது நேரம் ஆகலாம்.