மெட்டாவுக்கு சொந்தமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளமான WhatsApp லோக்ட் சேட்கலுக்கு சீக்ரட் கோட் அம்சம் கொண்டு வந்துள்ளது. இந்த அம்சத்தின் நோக்கம் பயனர்களின் உணர்வுபூர்வமான விசயங்களை பாதுகாப்பாக வைப்பது ஆகும்.
நவம்பர் 30 அன்று ஒரு வெப் போஸ்ட்டில் நிறுவனம் அறிவித்தது, “உங்கள் போனை யாராவது அணுகினால் அல்லது உங்கள் மொபைலை நீங்கள் பகிர்ந்து கொண்டால், லோக்ட் சேட்களை பாதுகாப்பாக வைத்திருக்க புதிய வழியான ரகசியக் கோட்களை நாங்கள் கொண்டுவந்துள்ளோம்.பின்னர் அந்த சேட்களை கண்டுபிடிப்பது கடினமாக இருக்கும்.
உங்களின் லோக்ட் சேட்களை சீக்ரெட் கோட் அம்சத்தின் மூலம் சீக்ரெட் கோட் அம்சத்தின் மூலம் நீங்கள் யூனிக பாஸ்வர்ட் அமைக்கலாம்,, இது உங்கள் ஸ்மார்ட்போனின் லோக்கிளிருந்து வேறுப்பட்டதாக இருக்கும் உங்கள் சேட் லிஸ்டிலிருந்து லோக் செய்யப்பட்ட சேட்களை மறைப்பதற்கான விருப்பமும் உங்களுக்கு இருக்கும், இதனால் சர்ச் பாக்ஸில் உள்ள ரகசியக் கோடை டைப் செய்வதன் மூலம் மட்டுமே அவற்றைத் திறக்க முடியும்.
இது தவிர, நீங்கள் ஒரு புதிய அரட்டையைப் லோக் விரும்பினால், அதன் அமைப்புகளுக்குச் செல்லாமல் சேட்டை நீண்ட நேரம் அழுத்துவதன் மூலம் அதை லோக் செய்யலாம்
லோக் செய்யப்பட்ட சேட்களை உங்கள் சேட் லிஸ்ட்டில் தோன்றாமல் மறைக்க, லாக் செய்யப்பட்ட சேட்களை போல்டரில் சென்று, செட்டிங்களுக்கு சென்று, ஹைட்லோக்ட் சேட் என்ற டான்கிளை ஆன் செய்யவும்.
இதையும் படிங்க.Tecno Spark Go 2024 போன் அறிமுக தேதி வெளியானது, iPhone போன்ற அம்சம் இருக்கும்
புதிய சீக்ரட் கோட் அம்சம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது, எனவே நீங்கள் இன்னும் அம்சத்தைப் பெறவில்லை என்றால், நீங்கள் சிறிது நேரம் காத்திருக்க வேண்டும்.