வாட்ஸ்ஆப்பிள் மேலும் புதிய அம்சம் என்னனு தெரியுமா…!
வாட்ஸ்அப் ஆப் யில் வேகெஷன் மோட் எனும் அம்சம் வழங்குவதற்கான வேலைகளை செய்து வருகிறது.
வாட்ஸ்அப் ஆப் யில் வேகெஷன் மோட் எனும் அம்சம் வழங்குவதற்கான வேலைகளை செய்து வருகிறது. இந்த அம்சம் புது மெசேஜ்கள் வரும் போது அவற்றை அன்-ஆர்ச்சிவ் செய்யாமல் இருக்கும். தற்சமயம் சாட் ஸ்க்ரீனில் புதிய மெசேஜ் வரும் போது தானாக அன்-ஆர்ச்சிவ் செய்யும்.
புதிய அம்சம் பயனர்களுக்கு வழங்கப்படும் போது இதனை வாட்ஸ்அப் செட்டிங்ஸ் பகுதியில் பார்க்க முடியும். மியூட் அல்லது ஆர்ச்சிவ் செய்யப்பட்ட சாட்கள் அவற்றை நீங்கள் தானாக அன்-மியூட் அல்லது அன்-ஆர்ச்சிவ் செய்யும் வரை அன்-ஆர்ச்சிவ் செய்யப்படாது. இந்த அம்சம் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
குறிப்பிட்ட சாட் உங்களது சாட் லிஸ்ட்-இல் இருக்க கூடாது என நினைக்கும் போது வேகெஷன் மோட் பயனுள்ளதாக இருக்கும். தற்சமயம் டெஸ்ட் செய்யப்படும் வேகெஷன் மோட் இதுவரை வழங்கப்படவில்லை. இதேபோன்று, ஆன்டராய்டு தளத்துக்கான வாட்ஸ்அப் ஆப்யில் மியூட் செய்யப்பட்ட சாட்களுக்கு ஆப் பேட்ஜ்களை மறைக்க வழி செய்கிறது.
இதேபோன்று வாட்ஸ்அப் அக்கவுன்ட்டை வெளிப்புற சேவைகளுடன் இணைக்கக் கோரும் புதிய அம்சத்தை வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளது. இந்த அம்சம் வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப்க்கு வழங்கும் நோக்கில் உருவாக்கப்படுவதாக தெரிகிறது. எனினும் இந்த அம்சம் மற்ற பயனர்களுக்கும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
இந்த அம்சம் ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் இதுவரை வழங்கப்படவில்லை. லின்க்டு அக்கவுன்ட் ஆப்ஷன்கள் ப்ரோஃபைல் செட்டிங்களின் கீழ் வழங்கப்படுகிறது. தற்சமயம் இன்ஸ்டாகிராம் மட்டுமே எக்ஸ்டெர்னல் சேவையாக வழங்கப்படுகிறது. இதை கொண்டு வாட்ஸ்அப் அக்கவுன்ட்டில் இன்ஸ்டாகிராம் ப்ரோஃபைலை இணைக்க முடியும்.
லின்க்டு அக்கவுன்ட்ஸ் அம்சம் கொண்டு பயனர்கள் தங்களது பாஸ்வேர்டுகளை மீட்க முடியும். இதை கொண்டு நேரடியாக இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸ் அப்டேட்களை செய்ய முடியும். புதிய அம்சங்கள் அனைத்தும் சோதனை செய்யப்படுவதால், இவை பயனர்களுக்கு வழங்க இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile