ஆண்ட்ரோய்ட் மற்றும் iOS அட்மினை டிஸ்மிஸ் செய்யும் வசதி வாட்ஸ்அப்பில் அறிமுகம்

Updated on 19-Apr-2018
HIGHLIGHTS

அம்சம் வாட்ஸஅப் யின் ஆண்ட்ரோய்ட் வெர்சன் மற்றும் IOS வெர்சன் 2.18.41 இருக்கிறது

 

வாட்ஸ்அப் app பயனர்களுக்கு புதிய அம்சங்கள் தொடர்ச்சியாக சேர்க்கப்பட்டு வருகிறது. சமீபத்திய ஆன்ட்ராய்டு பீட்டா அப்டேட்டில் புதிய அம்சம் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துளது.

வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா 2.18.117 பதிப்பில் ஹை ப்ரியாரிட்டி நோட்டிஃபிகேஷன் மற்றும் டிஸ்மிஸ் அட்மின் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. புதிய அம்சங்கள் ஐஓஎஸ் மற்றும் வெப் வெர்ஷனிலும் வழங்கப்படுகிறது.

WABeta Info மூலம் வெளியாகி இருக்கிறது. ஹை ப்ரியாரிட்டி அம்சம் புஷ் நோட்டிபிகேஷன்களை சிறப்பாக இயக்க வழி செய்கிறது. இந்த அம்சம் செயல்படுத்தப்பட்டால் பயனர்களுக்கு வரும் நோட்டிபிகேஷன்கள் ஸ்கிறீனின் மேல் பின் செய்யப்பட்டிருக்கும். இது பிரைவேட் சாட் மற்றும் க்ரூப் உள்ளிட்டவற்றுக்கும்  பொருந்தும். இதனை நோட்டிபிகேஷனின் செட்டிங்ஸ் மெனுவில் இருந்து செயல்படுத்த வேண்டும்.

டிஸ்மிஸ் அட்மின் எனும் மற்றொரு அம்சம் வாட்ஸ்அப் க்ரூப்களுக்கானது ஆகும். இந்த அம்சம் க்ரூப் அட்மின்கள் குறிப்பிட்ட க்ரூப் மற்ற அட்மின் பொறுப்பாளர்களை க்ரூப்பில் இருந்து நீக்காமல் அட்மின் பொறுப்பை மட்டும் நீக்கும் வசதியை வழங்குகிறது. இந்த அம்சம் க்ரூப் இன்ஃபோ பகுதியில் இருந்து இயக்க முடியும்.

இந்த அம்சம் டிஸ்மிஸ் அட்மின் என்ற பெயரில் ஐஓஎஸ் மற்றும் வெப் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனை 2.18.41 வெர்ஷனில் இருந்து 2.18.116 வெர்ஷனில் மாறும் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.

ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் தனது பீட்டா செயலியில் புதிய அம்சங்களை சோதனை செய்கிறது. இவ்வாறு சோதனை செய்யப்படும் அம்சங்களில் சில அ்மசங்கள் அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படும், சில அம்சங்கள் வழங்கப்படாது. சில நாட்களுக்கு முன் வாட்ஸ்அப் பேமென்ட்ஸ் அம்சம் மேம்படுத்தப்பட்டது. 

அதன் படி கியூ ஆர் கோடு அல்லது யுபிஐ ஐடி மூலம் மட்டுமே பேமென்ட் அம்சத்தை பயன்படுத்த முடியும். இந்த அம்சத்தை செட்டிங் — பேமென்ட் — சென்ட் பேமென்ட் — சென்ட் டு யுபிஐ ஐடி போன்ற அம்சங்களை கிளிக் செய்ய வேண்டும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :