Whatsapp வந்துள்ளது புதிய Shopping பட்டன், எப்படி வேலை செய்யும் இந்த அம்சம்.

Whatsapp  வந்துள்ளது புதிய Shopping  பட்டன்,  எப்படி வேலை செய்யும் இந்த அம்சம்.
HIGHLIGHTS

Whatsapp செயலியில் ஷாப்பிங் பட்டன் வசதியை பேஸ்புக் நிறுவனம் தனது அறிமுகம் செய்து இருக்கிறது

Shopping பட்டன் வசதியில் சாட் செய்வதை போன்றே பொருட்களை ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம்

வாட்ஸ்அப் செயலியில் ஷாப்பிங் பட்டன் வசதியை பேஸ்புக் நிறுவனம் தனது அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த வசதி இந்தியா உள்பட பல்வேறு இதர நாடுகளிலும் வழங்கப்பட்டு வருகிறது.

ஷாப்பிங் பட்டன் வசதியில் சாட் செய்வதை போன்றே பொருட்களை ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம். மேலும் இந்த அம்சம் பயனர்கள் வியாபாரங்கள் வழங்கும் பொருட்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளவும் வழி செய்கிறது.

இந்த அம்சம் பயனர்கள் மட்டுமின்றி வியாபாரங்கள் தங்களின் பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்க உதவியாக இருக்கும். இதன் மூலம் விற்பனை அதிகரிக்கும். 

முன்னதாக இதுபோன்ற அம்சத்தை இயக்க பயனர்கள் அந்தந்த வியாபாரங்களின் பிஸ்னஸ் ப்ரோபைலை க்ளிக் செய்ய வேண்டிய நிலை இருந்து வந்தது. தற்சமயம் ஷாப்பிங் பட்டனை பார்த்ததும், பயனர்கள் க்ளிக் செய்து குறிப்பிட்ட வியாபார பொருட்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

புதிய ஷாப்பிங் பட்டன் வாட்ஸ்அப் பிஸ்னஸ் அக்கவுண்ட் சாட் ஸ்கிரீன்களில் மட்டுமே காணப்படும். அந்த வகையில், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் சாட் ஸ்கிரீனில் ஷாப்பிங் பட்டன் இடம்பெறாது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo