வாட்ஸ்அப் க்ரூப் வீடியோ காலிங் அம்சம் அறிமுகமாகியுள்ளது

Updated on 23-May-2018
HIGHLIGHTS

வாட்ஸ்அப்பில் அதிகம் எதிர்பார்க்கப்படும் க்ரூப் வீடியோ காலிங் அம்சம் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் வழங்கப்படுகிறது.

வாட்ஸ்அப்பில் அதிகம் எதிர்பார்க்கப்படும் க்ரூப் வீடியோ காலிங் அம்சம் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் வழங்கப்படுகிறது.

புதிய அப்டேட் மூலம் வாடிக்கையாளர்கள் க்ரூப் வீடியோ கால் மேற்கொள்ள முடியும். பிப்ரவரி மாத வாக்கில் வாட்ஸ்அப் வெர்ஷன் 2.18.39 ஆன்ட்ராய்டு பீட்டா செயலியில் க்ரூப் வீடியோ காலிங் வசதி வழங்கப்படுவதற்கான அறிகுறிகள் காணப்பட்டன. 

வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வீடியோ காலிங் வசதியில் க்ரூப்களில் இருக்கும் அதிகபட்சம் நான்கு பேருடன் வீடியோ கால் ஒரே சமயத்தில் பேச முடியும். புதிய அம்சம் ஏற்கனவே  2.18.145 பதிப்பில் வழங்கப்படுகிறது. புதிய அப்டேட் பெற்றவர்கள் மட்டுமின்றி இந்த அம்சத்தை பெற அதிர்ஷ்டம் இருக்க வேண்டும்.

க்ரூப் வீடியோ கால் அம்சம் தற்சமயம் சர்வெர் சார்ந்த அப்டேட் மூலம் வெளியிடப்பட்டு இருப்பதால் அனைவருக்கும் இந்த அம்சம் வழங்கப்படாமல் சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் புதிய அம்சத்தை குறைந்தளவு வாடிக்கையாளர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

வாட்ஸ்அப் சோதனை செய்து வரும் மற்ற அம்சங்களை போன்று இல்லாமல் புதிய வசதியை இன்வைட் மூலமாக ஆக்டிவேட் செய்ய முடியாது. இதே நிலை ஐஓஎஸ் தளத்துக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஓஎஸ் தளத்தில் வாட்ஸ்அப் வெர்ஷன் 2.18.52 க்ரூப் வீடியோ காலிங் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

புதிய க்ரூப் காலிங் செய்ய வாட்ஸ்அப்பில்  நீங்கள் வீடியோ கால் செய்ய வேணடிய கான்டாக்ட்-ஐ தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது புதிய க்ரூப் காலிங் வசதி உங்களுக்கு வழங்கப்பட்டு இருந்தால், Add participant என்ற பட்டன் திரையில் தெரியும், இந்த பட்டன் தெரியாதபட்சத்தில் வீடியோ காலிங் செய்ய முடியாது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :