digit zero1 awards

ஒரு வழியாக இப்பொழுது அனைத்து பயனர்களுக்கும் வாட்ஸ்அப் குரூப் வீடியோ கால் அம்சம் அறிமுகமானது…!

ஒரு வழியாக  இப்பொழுது அனைத்து பயனர்களுக்கும் வாட்ஸ்அப்  குரூப் வீடியோ  கால்  அம்சம் அறிமுகமானது…!
HIGHLIGHTS

இந்த வீடியோ கால் எப்படி செய்வது வாருங்கள் பார்ப்போம்

வாட்ஸ்அப்   இந்த வீடியோ கால்  அம்சம் விரைவில் அறிமுகமாகும் என நிறைய நியூஸ் பத்து இருப்போம் அதனை தொடர்ந்து பல டெஸ்ட்  செய்ய பட்டு வந்த நிலையில் இந்த அம்சமானது இப்பொழுது அனைத்து பயனர்களுக்கு கிடைக்க ஆரம்பித்துள்ளது 

இந்நிலையில் வாய்ஸ் மற்றும் வீடியோ க்ரூப் கால் அம்சம் அனைவருக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் ஒரே சமயத்தில் நான்கு பேருடன் க்ரூப் கால் செய்ய முடியும். இந்த அம்சம் எவ்வாறு வேலை செய்யும் என்பதை பார்ப்போம்.

https://static.digit.in/default/cb3239933d671b075c0f287c72e67ecce7b61c76.jpeg

– முதலில் ஒரு வாய்ஸ் அல்லது வீடியோ கால் செய்யவும்

– பின் “add participant” பட்டனை க்ளிக் செய்து பயனர்களை சேர்க்கலாம்

– நீங்கள் சேர்க்க வேண்டிய மற்ற கான்டாக்ட்களை சர்ச் பாக்ஸ் மூலம் தேடி, தேர்வு செய்ய வேண்டும்

– க்ரூப் வாய்ஸ் அல்லது வீடியோ கால் வரும் போது உங்களது திரையில் அழைப்பில் இருப்பவர்களை பார்க்க முடியும்

– அழைப்பில் இருப்பவர் மற்றும் பட்டியலிடப்பட்டு இருக்கும் முதல் கான்டாக்ட் தான் உங்களை சேர்த்திருக்க வேண்டும்.

– க்ரூப் வாய்ஸ் கால் செய்யும் போது அதனை வீடியோ கால் ஆக மாற்ற முடியாது.

– க்ரூப் வீடியோ கால் செய்யும் போது கேமராவை ஆஃப் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.

– க்ரூப் வாய்ஸ் அல்லது வீடியோ கால் செய்யும் போது கான்டாக்ட்-ஐ எடுக்க முடியாது. கான்டாக்ட் அழைப்பு துண்டிக்கப்படும் வரை காத்திருக்க வேண்டும்.

– க்ரூப் வாய்ஸ் அல்லது வீடியோ கால் ஹிஸ்ட்ரி அழைப்புகளுக்கான டேபில் பார்க்க முடியும். கால் ஹிஸ்ட்ரியை க்ளிக் செய்து ஒவ்வொரு கான்டாக்ட்டையும் பார்க்க முடியும்.

– க்ரூப் வாய்ஸ் அல்லது வீடியோ கால் செய்யும் போது உஙக்ளை பிளாக் செய்தவருடன் இருக்க முடியும், ஆனால் நீங்கள் பிளாக் செய்த அல்லது உங்களை பிளாக் செய்தவர்களுக்கு அழைப்பு விடுக்க முடியாது.

https://static.digit.in/default/e891911e707bff9140c07a10b24f1d719ae691ce.jpeg

மெசேஜ்களை போன்றே வாட்ஸ்அப் க்ரூப் கால்களும் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்படுகிறது. உலகம் முழுக்க வெவ்வேறு பகுதிகளில் உள்ள நெட்வொர்க்-க்கு ஏற்ப வேலை செய்யும் படி க்ரூப் காலிங் அம்சம் வழங்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு மற்றும் ios  தளங்களில் வழங்கப்பட்டு இருப்பதால் க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சம் அடுத்த சில தினங்களில் அனைவருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo