WhatsApp யில் வருகிறது செம்ம அம்சம் ஸ்டேட்டஸை 24 மணி நேரத்திற்க்கு பிறகு பத்துக்காலம் எங்கேயும் போகாது.

Updated on 30-May-2023
HIGHLIGHTS

இன்ஸ்டன்ட் மெசேஜ் தளமான வாட்ஸ்அப் தொடர்ந்து புதிய அம்சங்களையும் வசதிகளையும் அறிமுகப்படுத்தி வருகிறது

WhatsApp இப்போது Status Archive அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது

ன்னதாக வாட்ஸ்அப் பீட்டா சோதனைக்காக ஸ்கிரீன் ஷேரிங் அம்சத்தை அறிமுகப்படுத்தியது.

இன்ஸ்டன்ட் மெசேஜ் தளமான வாட்ஸ்அப் தொடர்ந்து புதிய அம்சங்களையும் வசதிகளையும் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த எபிசோடில், WhatsApp இப்போது Status Archive அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த அம்சம் ஆண்ட்ராய்டில் வணிகக் கருவியாக வெளியிடப்படும். தற்போது இது சோதனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பிளாட்ஃபார்ம் டிராக்கர் WABetaInfo படி, இந்த அம்சம் வரும் வாரங்களில் அதிகமான பயனர்களுக்குக் கிடைக்கும். முன்னதாக வாட்ஸ்அப் பீட்டா சோதனைக்காக ஸ்கிரீன் ஷேரிங் அம்சத்தை அறிமுகப்படுத்தியது.

ஸ்டேட்டஸ் ஏக்டிவ் அம்சம்.

ஸ்டேட்டஸ் டேப்பை மேம்படுத்த மெசேஜிங் இயங்குதளம் செயல்படுகிறது. அம்சம் வெளியிடப்பட்டதும், பயனர்கள் ஸ்டேட்டஸ் டேபிள்  ஒரு நோட்டிபிகேஷன் பேனரைப் பெறுவார்கள். இந்த அம்சத்தின் உதவியுடன், 24 மணிநேரத்திற்குப் பிறகும் ஸ்டேட்டஸை காணலாம். உண்மையில், இந்த ஸ்டேட்டஸ் அப்டேட்கள் 24 மணிநேரத்திற்குப் பிறகு போனில் சேமிக்கப்படும்.

கூடுதலாக, பயனர்கள் காப்பக முன்னுரிமையை நிர்வகிக்கலாம் மற்றும் ஸ்டேட்டஸ் டேபிள் உள்ள மெனுவிலிருந்து நேரடியாக archive பார்க்கலாம். WABetaInfo குறிப்பிட வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், archive எப்போதும் தனிப்பட்டதாக இருக்கும், எனவே பிஸ்னஸ் பயனர்கள் மட்டுமே தங்கள் ஆர்ச்சிவ்  ஸ்டேட்டஸ் நிலை  மற்றும் அப்டேட்களை பார்க்க முடியும்.

ஸ்டேட்டஸில் 30 நாட்கள் வரையிலான ஸ்டேட்டஸை அப்டேட்டில் வைக்கலாம்.அக்கவுண்ட் ஹோல்டர் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஸ்டேட்டஸ் பாரில் எக்ஸ்பைர் ஆகும் வரை ஸ்டேட்டஸ் அப்டேட்களை உருவாக்க அல்லது ஷேர் செய்யலாம்..

வீடியோ கால் மூலம் ஸ்க்ரீன் ஷேர் செய்யலாம்.

Whatsapp  சாமிபத்தில் வீடியோ கால் மூலம் ஸ்க்ரீன் ஷேர் செய்யும் வசதி  பீட்டா டெஸ்டிங் மூலம் கொண்டு வந்துள்ளது. இந்த அம்சத்தின் உதவியுடன், பயனர்கள் வீடியோ காலிங்கின் போது தங்கள் ஸ்க்ரீன் உள்ளடக்கத்தை காலின் உள்ள மற்ற பங்கேற்பாளர்களுக்கு காண்பிக்கும் வசதியைப் வழங்குகிறது. ஸ்க்ரீன் ஷேர் என்பது Zoom, Google Meet, Microsoft Teams மற்றும் Skype போன்ற பயன்பாடுகளிலும் வழங்கப்படும் அம்சமாகும். அதாவது, வாட்ஸ்அப் வீடியோ காலிங்கின் போதும் இதே போன்ற ஸ்க்ரீனை ஷேர் செய்யலாம்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :