WhatsApp யில் Contact சேமிப்பதில் மாற்றம், எப்படி வேலை செய்யும் இந்த அம்சம்.

WhatsApp  யில் Contact  சேமிப்பதில் மாற்றம், எப்படி வேலை செய்யும் இந்த அம்சம்.
HIGHLIGHTS

பயனர்களுக்கான QR கோடின் ஆதரவு விரைவில் வருகிறது.

QR கோட் இருக்கும், மற்ற பயனர்கள் தங்கள் போனில் எண்ணை ஸ்கேன் செய்து சேமிக்க முடியும்.

வாட்ஸ்அப் பயனர்களின் சுயவிவரத்திற்கு( Profile ) அடுத்ததாக ஒரு QR கோட் தோன்றும்

உலகின் பிரபலமான மெசேஜிங் பயன்பாடான வாட்ஸ்அப் கடந்த வாரம் சில புதிய அம்சங்களை அறிவித்துள்ளது. KaiOS போன்ற இயக்க முறைமைகளைக் கொண்ட போன்களுக்கான அனிமேஷன் ஸ்டிக்கர்கள், வாட்ஸ்அப் வெப் மற்றும் ஸ்டேட்டஸ் அம்சங்களுக்காக டார்க் மோடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்போது பொது பயனர்களுக்கான QR கோடின் ஆதரவு விரைவில் வருகிறது. இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம், வாட்ஸ்அப்பில் எண்ணைச் சேமிக்கும் வழி முற்றிலும் மாறும்.

நிறுவனம் பல மாதங்களாக இந்த அம்சத்தை சோதித்து வருகிறது. சில வாட்ஸ்அப் பீட்டா பயனர்களுக்கு இந்த அம்சம் கடந்த ஆண்டு மட்டுமே கிடைத்தது. இப்போது இது விரைவில் அனைத்து பயனர்களுக்கும் வெளியிடப்படும். இதற்குப் பிறகு, அனைத்து பயனர்களுக்கும் அவற்றின் தனித்துவமான QR கோட் இருக்கும், மற்ற பயனர்கள் தங்கள் போனில் எண்ணை ஸ்கேன் செய்து சேமிக்க முடியும். எனவே இந்த அம்சம் எவ்வாறு செயல்படும் என்பதை அறிவோம்.

இது போல வேலை செய்யும்  QR கோட்.

வாட்ஸ்அப் பயனர்களின் சுயவிவரத்திற்கு( Profile ) அடுத்ததாக ஒரு QR கோட் தோன்றும். இந்த கோடை காண, பயனர்கள் பயன்பாட்டின் சேட்டிங்க்ளுக்கு செல்ல வேண்டும், அங்கு இந்த கோட் சுயவிவரப்  (Profile ) பெயர் மற்றும் படத்துடன் காணப்படும். QR கோட்டின் ஐகானைத் தட்டினால், அது  My Code என்ற தாவலில் திறக்கும். இந்த கோடை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.

My code அடுத்தபடியாக ஸ்கேன் கோட் விருப்பத்தையும் பயனர்கள் பார்ப்பார்கள். இதன் மூலம், உங்கள் போனின் கேமராவைத் திறப்பீர்கள், இதன் மூலம் நீங்கள் வேறு எந்த பயனரின் கோடையும் ஸ்கேன் செய்து அவற்றின் எண்ணை உங்கள் தொடர்பு பட்டியலில் சேமிக்க முடியும். அதாவது, நீங்கள் இனி எண்ணைத் டைப் செய்ய வேண்டியதில்லை. இந்த அம்சம் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இது இன்னும் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கவில்லை. இது வரும் சில வாரங்களில் பயனர்களை அடையக்கூடும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo