Privacy Policy யில் மாத்தி பேசும் வாட்ஸ்அப் அட அது அப்படி இல்லிங்க.
புதிய பிரைவசி பாலிசி மாற்றம் குறித்த அறிவிப்பு அதன் பயனர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை பெற்றது
வெறும் 18 சதவீதம் பேர் மட்டுமே செயலியை தொடர்ந்து பயன்படுத்த இருப்பதாக தெரிவித்து இருக்கின்றனர்
வாட்ஸ்அப் செயலியில் புதிய பிரைவசி பாலிசி மாற்றம் குறித்த அறிவிப்பு அதன் பயனர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை பெற்றது. பலர் வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக சிக்னல், டெலிகிராம் என பல்வேறு செயலிகளை பயன்படுத்த போவதாக தெரிவித்து வருகின்றனர்.
“உலகம் முழுக்க என்ட்-டு-என்ட் என்க்ரிப்ஷன் வசதியை பயனர்களுக்கு வழங்க வாட்ஸ்அப் உதவியது. தற்சமயம் இந்த பாதுகாப்பான தொழில்நுட்பத்தை தொடர்ந்து பயனர்களுக்கு வழங்கும் குறிக்கோள் கொண்டிருக்கிறோம். எங்களிடம் கருத்துக்களை எடுத்துரைத்த அனைவருக்கும் நன்றி.”
முன்னதாக பிப்ரவரி 8 ஆம் தேதிக்குள் பயனர்கள் புதிய பிரைவசி பாலிசியை ஏற்றுக் கொள்ள சம்மதம் தெரிவிக்க வாட்ஸ்அப் கெடு விதித்து இருந்தது. தற்சமயம் இந்த காலக்கெடு மே 15 வரை நீட்டிக்கப்படுவதாக வாட்ஸ்அப் தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், தனியார் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் வாட்ஸ்அப் பயனர்களில் வெறும் 18 சதவீதம் பேர் மட்டுமே செயலியை தொடர்ந்து பயன்படுத்த இருப்பதாக தெரிவித்து இருக்கின்றனர். இந்தியா முழுக்க 244 மாவட்டங்களில் சுமார் 24 ஆயிரம் பேரிடம் வாட்ஸ்அப் பிரைவசி பாலிசி மாற்றம் பற்றிய கேள்வி கேட்கப்பட்டது.
ஆய்வில் பங்கேற்று கேள்விகளுக்கு பதில் அளித்தவர்களில் சுமார் 18 சதவீதம் பேர் தொடர்ந்து வாட்ஸ்அப் பயன்படுத்த விரும்புவதாகவும், தங்களின் தரவுகளை பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ள அனுமதி அளிப்பதாகவும் தெரிவித்தனர். 26 சதவீதம் பேர் வாட்ஸ்அப் பயன்பாட்டை குறைத்து மற்ற செயலிகளை பயன்படுத்த இருப்பதாக தெரிவித்தனர்.
அதன் காரணமாக “சமீபத்திய அப்டேட் குறித்து பலருக்கு குழப்பம் இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. புதிய பிரைவசி பாலிசி பற்றி கவலை எழுப்பும் தவறான தகவல் பரவி வருகிறது. அனைவரும் எங்களின் கொள்கைகள் மற்றும் உண்மையை புரிந்து கொள்வதற்கு நாங்கள் உதவுகிறோம்.” என வாட்ஸ்அப் தனது வலைதளத்தில் குறிப்பிட்டு இருக்கிறது.
மேலும் வாட்ஸ்அப் சேவைக்கு போட்டியாக விளங்கும் டெலிகிராம் மற்றும் சிக்னல் செயலிகளின் பயனர் எண்ணிக்கை ஜனவரி 6 முதல் ஜனவரி 10 ஆம் தேதிக்குள் மட்டும் 40 லட்சம் வரை அதிகரித்து இருக்கிறது. இதே காலக்கட்டத்தில் வாட்ஸ்அப் டவுன்லோட் எண்ணிக்கை 35 சதவீதம் சரிவடைந்து உள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile