இந்தியா முழுக்க சுமார் 30 கோடி பேர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பேமன்ட் சேவைக்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் சேவையின் பயனர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் மக்கள் பணம் பரிமாற்றம் செய்வதற்க்கு தனி ஒரு ஆப் பயன்படுத்துவதை தவிர்த்து வாட்ஸ்அப்பில் அனைத்தும் கிடைத்தால் நல்லதே
அந்த வகையில் ஃபேஸ்புக் நிறுவனம் விரைவில் வாட்ஸ்அப் பேமன்ட் சேவையை இந்தியாவில் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ்அப் பேமன்ட் சேவைக்கான வெளியீடு இந்திய அரசு கட்டுப்பாடுகளால் தாமதமாகி வந்தது. குறிப்பாக இதுகுறித்த அனைத்து விவரங்களும் இந்திய சர்வெர்களில் சேமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
UPI சார்ந்து இயங்கும் பணபரிமாற்ற சேவையை வழங்க வாட்ஸ்அப் முயற்சித்து வருகிறது. இதற்கென வாட்ஸ்அப் நிறுவனம் உள்நாட்டு நிறுவனங்களுடன் தொடர்ந்து பணியாற்ற இருக்கிறது.
தற்சமயம் இந்நிறுவனம் சேவையை துவங்குவதற்கான அனுமதியை கோரும் விண்ணப்பத்தை மத்திய ரிசர்வ் வங்கியிடம் சமர்பிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இதுகுறித்த தகவல்களை வழங்க வாட்ஸ்அப் மறுத்துவிட்டது.