வாட்ஸ்அப் பெ இந்தியாவில் விரைவில் வரும் இனி அதிக வெயிட் செய்ய தேவை இல்லை.
நாடு முழுக்க சுமார் 40 கோடி பேர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்
வாட்ஸ்அப் பே சேவை வழங்கப்படும்
வாட்ஸ்அப் பே சேவை தற்சமயம் குறைந்த பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், வாட்ஸ்அப் பே சேவையை நாடு முழுக்க வழங்குவதற்கு தேசிய பணப்பட்டுவாடா கழகம் அனுமதி அளித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் வாட்ஸ்அப் பேமன்ட் சேவையை அந்நிறுவனம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முடியும்.
தற்சமயம் தடைகள் நீங்கி சேவையை துவங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், வாட்ஸ்அப் பே சேவை முதற்கட்டமாக சுமார் ஒரு கோடி பேருக்கு வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது. இந்த சேவை யு.பி.ஐ. மூலம் மொபைலில் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள வழி செய்யும்.
முன்னதாக 2018 ஆண்டில் வாட்ஸ்அப் நிறுவனம் சுமார் பத்து லட்சம் பேருடன் வாட்ஸ்அப் பே சேவைக்கான சோதனையை துவங்கியது. எனினும் அரசு அனுமதி கிடைக்காததால் இந்த சேவையை வாட்ஸ்அப் இதுவரை வழங்கவில்லை.
நாடு முழுக்க சுமார் 40 கோடி பேர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வாட்ஸ்அப் பே சேவை வழங்கப்படும் போது, நாட்டின் மிகப்பெரும் மொபைல் பேமண்ட் சேவைகளில் ஒன்றாக இது இருக்கும் என கூறப்படுகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile