WhatsApp இலவச 1000GB டேட்டா நம்பி ஏமாந்துராதிங்க மக்களே உஷாரா இருங்க.
WhatsApp Fake Message வாட்ஸ்அப் தற்பொழுது போலியான மெசேஜை பரப்பி வருகிறது அதாவது 1010-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் பயனர்களுக்கு 1000 ஜிபி இலவசமாய் வழங்கப்போவதாக செய்தி ஒன்று பரவி வருகிறது அதை நம்பி பயனர்கள் அந்த ஆபர் எப்படி பெறுவது என்றெல்லாம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அந்த செய்தி பின் வருமாறு உள்ளன: வாட்ஸ்அப் 1000 ஜிபி இலவச இணையத்தை வழங்குகிறது! ”இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் , அந்த லிங்கை கிளிக் செய்தால் பயனர்கள் ஒரு சர்வே யை முடிக்கும்படி கேட்கிறது. பிறகு, இலவச டேட்டாவை பெற வாட்ஸ்அப்பில் 30 நபர்களுடன் சில விளம்பர படத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும், என்பதாய் அந்த செய்திகள் உள்ளன.
இது திட்டமிட்ட மோசடி பிரச்சாரம் என்று போர்ப்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த போலி செய்தியைப் படித்த ஐடி செக்யூரிட்டி நிறுவனமான இஎஸ்இடி யின் ஆராய்ச்சியாளர்கள் இது பற்றி கூறுகையில் ” தற்சமயம் அந்த செய்தியில் உள்ள லிங்கால் பெரிய தீங்கு விளைவிக்கும் ரான்சம்வேரோ மற்றும் பயனரின் தனிப்பட்ட தகவல்களை திருடுவதற்கான சாராம்சமோ இல்லை. இன்டர்நெட் குற்றவாளிகள் விளம்பர கிளிக் வருவாயைப் பெறுவதற்காகவே இந்த இணைப்பை பயன்படுத்திகிறார்கள். ஆனால் அவர்களின் நோக்கம் எப்போதும் வேண்டுமானாலும் மாறலாம். இந்த லிங்கால் நாளைய நாட்களில் பெரும் ஆபத்தைக் கூட ஏற்படுத்த முடியும்” என்றார்கள்.
எந்த லிங்கையும் நீங்கள் தவிர்ப்பதே நல்லது உங்களது சந்தேங்களை அந்தந்த நிறுவனங்களின் இணையதளத்திற்கு நேராக சென்று ஏதேனும் ப்ரோமோஷனல் ஈவென்ட்ஸ் செய்கிறார்களா! என்று பார்த்து விடுங்கள்”,என்றார்.சைபர் செக்யூரிட்டி நிறுவனமான மெக்காஃபி நிறுவனத்தின் முதன்மை நுகர்வோர் பாதுகாப்பு நற்செய்தியாளராக இருக்கும் கேரி டேவிஸ் இதை பற்றி தெரிவிக்கையில், ” சந்தேகத்திற்கு விதமாக இருக்கும்
மேலும் அந்த விளம்பர பரப்பில் எழுத்துப்பிழை இருப்பதை கண்டு பிடிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது அதாவது மேலும், இது போன்ற எந்த ஆபர் பற்றி வாட்ஸ்அப் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்று மேலும் இது போன்ற விளம்பரத்தை அடியோடு தவிர்ப்பது மிகவும் நல்லது என்று டேவிஸ் மீண்டும் புன்னகையோடு தெரிவித்தார்.
மேலும் இது போன்ற போலி செய்திகள் பல பரவி கொண்டு தான் இருக்கிறது சமீபத்தில் வாட்ஸ்அப் பணம் வசூலிக்க போவதாக ஒரு போலியான தகவலை பரவி வந்தது மட்டுமியல்லாமல் அந்த செய்தியை மோடி அறிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது பின்னர் அது போலி என்று கண்டறியப்பட்டது மேலும் இது போன்ற பல போலிசெய்திய தவிர்ப்பது நல்லது இதனால் உங்களின் பேங்க் அக்கவுண்ட் நம்பரை திருடப்பட்ட வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. எனவே மக்கள் நீங்கள் தான் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile