WhatsApp யில் வருகிறது மஜாவான அம்சம் நம்பரே இல்லாமல் சேட்டிங் செய்யலாம்

Updated on 24-Oct-2024

சோசியல் மீடியா இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளமான WhatsApp புதிய அம்சங்களில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக, பயனர்கள் அதில் பல மாற்றங்களைக் காணலாம். புதிய அம்சங்கள் காரணமாக ஆப்பிள் பாதுகாப்பும் அதிகரிக்கிறது. இது தவிர, பயனர்கள் புதிய அனுபவங்களையும் வழங்குகிறது . இப்போது மெட்டாவுக்குச் சொந்தமான சோசியல் மீடியா மெசேஜிங் தளமான வாட்ஸ்அப் புதிய அம்சத்தை உருவாக்கி வருகிறது.

வாட்ஸ்அப் தற்போது யூசர் நேம் (User Name) அம்சத்தில் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் வாட்ஸ்அப்பில் யாருடனும் சேட் செய்ய மொபைல் நம்பர் தேவையில்லை. அதாவது உங்கள் தனிப்பட்ட நம்பரை ஷேர் செய்வதற்க்கு பதிலாக, உங்கள் user name உதவியுடன் மட்டுமே நீங்கள் சேட் செய்ய முடியும். இது பயனர்களின் ப்ரைவசியை அதிகரிக்கும்.

வாட்ஸ்அப்பின் புதிய அம்சங்களை கண்காணிக்கும் WABetaInfo என்ற வெப்சைட்டில் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான வாட்ஸ்அப்பின் பீட்டா வெர்சனில் இந்த அம்சம் காணப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது நிறுவனம் தேர்ந்தெடுத்த iOS பீட்டா பயனர்களுக்குக் கிடைக்கச் செய்கிறது.

ப்ரோபைக் செக்சனில் கிடைக்கும் யூசர்நேம் ஆப்சன்.

அறிக்கையில் ஒரு ஸ்கிரீன் ஷாட்டும் பகிரப்பட்டுள்ளது. இதில் வாட்ஸ்அப் யூசர்நேம் அமைப்பதற்கான ஆப்ஷன் ஆப்ஸின் ப்ரொஃபைல் பிரிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், பயனர்கள் சில சிறப்பு எழுத்துகள் மற்றும் எண்ணெழுத்து எழுத்துக்களின் உதவியுடன் தங்கள் யூசர்நேம் உருவாக்கலாம். இருப்பினும், இயங்குதளத்தில் உள்ள ஒவ்வொரு பயனர் பெயரும் தனிப்பட்டதாக இருக்க வேண்டும்.

WhatsApp Username

ஒரு பயனர் ஒருவரின் யூசர்நேம் சேட் தொடங்கினால், அந்தக் அக்கவுண்டுடன் தொடர்புடைய மொபைல் நம்பர் மறைக்கப்பட்டிருக்கும். இருப்பினும், நபர் அதைப் ஷேர் செய்வது , அந்த நம்பர் மற்ற பயனர்களுக்குத் தெரியும். அறிக்கையின்படி, தனிப்பட்ட மற்றும் வணிக பயனர்கள் இருவரும் தங்கள் விருப்பப்படி ஒரு பயனர்பெயரை உருவாக்கலாம்.

விரைவில் இந்த அம்சம் அறிமுகமாகும்.

வாட்ஸ்அப்பில் உள்ள மற்ற அரட்டைகளைப் போலவே, பயனர் பெயரைப் பயன்படுத்தி தொடங்கும் உரையாடலும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்படும். இருப்பினும், தற்போது இந்த அம்சம் பீட்டா பதிப்பில் வழங்கப்படுகிறது. அம்சம் சரியாக வேலை செய்த பிறகு, நிறுவனம் அதை அனைவருக்கும் வெளியிடலாம். இந்த அம்சங்களுடன், பயனர்கள் அதிக தனிப்பட்ட மற்றும் பயனர் நட்பு சேட்கலை வைத்திருக்க முடியும்.

இதையும் படிங்க:WhatsApp யில் வருகிறது Snapchat போன்ற அம்சம் இனி முகம் நல்லா இல்லைன்னு கவலை படாதிங்க

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :