வாட்ஸ்அப்பில் புதிய அம்சம் அறிமுகம்…!

வாட்ஸ்அப்பில்  புதிய அம்சம் அறிமுகம்…!
HIGHLIGHTS

இனி நீங்கள் வாட்ஸ்அப் இனி இரவில் பயன்படுத்தும்போது கண் கூசது

நம்முள் நிறைய பேர் வேலைக்கு போகிறோம் இதனுடன் நாம் வாட்ஸ்அப் திறந்து பார்ப்பதற்கு கூட நேர இருப்பதில்லை எனவே நாம்  எப்பொழுதும் இரவில் தூங்குவதற்க்கு  முன்பு வாட்ஸ்அப்  நாம்  அவசியமாக  பார்த்து வருகிறோம் அப்படி நாம இரவில் பார்த்தல் அந்த லைட் நேரடியாக கண்ணில்  பட்டு கண் கூச ஆரம்பிக்கிறது இதன் காரணமாகவே  வாட்ஸ்அப்   புதிய அறிமுகம் ஆன DARK MODE  கொண்டுவர பட்டுள்ளது  இனி நீங்கள் வாட்ஸ்அப்பை  கண் கூசாமல் யூஸ் பண்ணலாம் 

வாட்ஸ்அப்  மிகவும் பிரபலமானது நமக்கு தெரிந்ததே ஒரு காலத்தில் மெசேஜில் மட்டுமே சாட்  செய்து கொண்டி இருந்தோம் ஆனால்  இப்பொழுதோ வாட்ஸ் அப் தான்  பக்க மாஸ் இதனுடன் வாட்ஸ் அப் மேலும் புது புது அமசங்களை  கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது அதாவது முதலில் ஸ்டேட்டஸ், பிறகு நீங்கள் அனுப்பிய மெசேஜை டெலிட் செய்யும் வசதி என பல அசத்தலான அம்சங்களை கொண்டு வந்துள்ளது 

  

மெசேஜ் ஆப்  ஆன வாட்ஸ் அப் மேலும் பல அப்டேட் செய்யப்பட வசதிகளுடன் புதிது புதிதாக பல அம்சங்களை கொண்டு வந்துள்ளது இதனுடன் இது நம்  வசதிக்கு ஏற்ற வாரு பயன்படுத்த முடிகிறது இதனுடன் மக்கள் இன்னும் எவ்வித சிரமம் இல்லாமல் பயன்படுத்த டார்க் மோட்’ மற்றும் இதனுடன் மெசேஜ்ஜை தவறாக யாருக்கும் அனுப்பி விட்டால் அதில் டெலிட் செய்யும் வசதியில் மேலும் சில அப்டேட்கள் விரைவில் வெளிவர உள்ளன

தகவல் தொடர்பு ஆப் ஆன வாட்ஸ் அப்பை தற்போது இந்தியாவில் மட்டும் சுமார் 200 மில்லியன் பேர் உபயோகித்து வருகின்றனர். இதனுடன் , பயனாளர்களின் வசதிக்காக புதுப்புது ஐடியாக்களை வாட்ஸ் அப் செயல்படுத்தி வருகின்றது. இந்நிலையில், மேலும் சில புதிய வசதிகளை வாட்ஸ் அப் இணைக்க உள்ளது. இதற்கான் அப்டேட் விரைவில் வெளியாக உள்ளது.

நாம் அனுப்பிய மெசேஜ்ஜை டெலிட் செய்யும் வசதி சமீபத்தில் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம், தெரியாமல் யாருக்கும் தவறான மெசேஜ்ஜை அனுப்பி விட்டால் உடனே டெலிட் செய்து விடலாம். இந்த வசதி பயனாளர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், அதில் மேலும் ஒரு அப்டேட் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதாவது ஒரு மெஜேச்சை தவறாக அனுப்பி விடால் அதனை 1 மணி நேரம், 8 நிமிடம், 16 விநாடிக்குள் டெலிட் செய்து விட்டால் பெறுநரால் அந்த மெசேஜ்ஜை பார்க்க முடியாது. டெலிட் ஆன மெசேஜ்ஜை பெறுநர் பார்ப்பதற்காக ரிவோக் ரெக்கியூஸ்ட் வசதி பின்னர் கொண்டுவரப்பட்டது. தற்போதைய அப்டேட்டில், மெஜேச்சை டெலிட் செய்ய முயற்சிக்கும்போது பெறுநர் ரிவோக் ரெக்கியூஸ்ட்டை 13 மணி நேரம், 8 நிமிடம், 16 நொடிக்குள் பெறவில்லை எனில் டெலிட் ஆன அந்த மெசேஜ்ஜை மீண்டும் எடுக்க முடியாது.

பெறுநரின் மொபைல் ஆஃப் செய்து இருந்தாலும் இது பொருந்தும். மேலும், ‘டார்க் மோட்’ என்ற வசதியும் புதிதாக கொண்டு வரப்பட உள்ளது. இரவு நேரங்களில் வாட்ஸ் அப்பில் உள்ள பின்புறத்தில் உள்ள வெள்ளை நிறம் கண்ணுக்கு கூசாமல் இருப்பதற்காக , நைட் மோட் போன்ற வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேற்கண்ட வசதிகள் விரைவில் அப்டேட் ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo